Special Macaroni Recipe - மக்ரோனி நூடில்ஸ்

 

வீட்டிலே சுவையான மக்கரோனி தயாரிப்பது எப்படி? மக்கரோனி ரெசிபி தமிழில். இச் சுவையான விருந்தை உங்கள் வீட்டில்  சுலபமாக தயாரித்து சுவைத்து மகிழுங்கள்.

6 பேருக்கு போதுமான சுவையான மக்ரோனி நூடில்ஸ் 

தேவையான பொருட்கள்  

  • மக்ரோனி நூடில்ஸ் - 1 பைக்கற் 
  • வெங்காயம்  - 100 கிராம் 
  • கறிமிளகாய் - 100 கிராம் 
  • கரட் - 100 கிராம் 
  • உள்ளி - 4 பல்லு 
  • மஞ்சள்த்தூள் - அளவிற்கு 
  • உப்புத்தூள் - அளவிற்கு
  •  மிளகுத்தூள் - அளவிற்கு 
  •  இறைச்சி - 500 கிராம் 
  • சிக்கின் கியூப் - 2 கட்டி 
  • தண்ணீர் - 1 டம்ளர் 
  • தக்காளி சோஸ் - 2 மே.க 
  • கோன் பிளா - 1 மே.க 
  • தே.எண்ணெய் - 5 மே.க 

செய்முறை 

  1. மக்ரோனி நூடில்ஸை உப்பிட்டு அவித்து வடித்துக் குளிர் நீரில் கழுவிக் கொள்க.

  2. வெங்காயம், கறிமிளகாய், கரட், உள்ளி என்பவற்றை துப்பரவு செய்து அளவான துண்டுகளாக வெட்டிக் கொள்க.

  3. 1 டம்ளர் தண்ணீரில் கோன்பிளா, சிக்கன் கியூப் என்பவற்றைக் கரைத்துக் கொள்க.

  4. இறைச்சியை உப்பிட்டு அவித்துக், அரைத்தெடுத்துக் கொள்க.

  5. தாச்சியில் எண்ணெயை விட்டுக் கொதித்த பின் வெட்டிய வெங்காயம், கறிமிளகாய், கரட், உள்ளி என்பவற்றையிட்டு வதங்க விட்டு உப்புத்தூள், மிளகுதூள் என்பவற்றை அளவிற்க்கு சேர்த்து நன்றாகக் கிளறிக் கொண்ட பின் மங்சள்த்தூள், தக்காளி சோஸ் என்பன இட்டு அவித்த இறைச்சியும் சேர்த்து 1 டம்ளர் தண்ணீரில் கரைத்த கோன்பிளா சூப் கரைசலை விட்டு தண்ணீர் வற்றும் வரை அவிய விட்டு நூடில்ஸை இட்டு புரட்டி இறக்கி கொள்க.     

Post a Comment

0 Comments