Lavariya Recipe Tamil - லவேரியா செய்முறை


லவேரியா செய்வது எப்படி? செய்முறை தமிழில். லாவரியா, தேங்காய் உள்ளீடுடன் அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஓர்  ஸ்ரீ லங்கன் இனிப்பு பண்டமாகும். 

 
18  லவேரியா தயாரிப்பது எப்படி 

தேவையான பொருட்கள் 

  • வறுத்துக்குற்றி முற்றாகத் தோல்நீக்கிய பாசிப்பருப்பு - 1/2சுண்டு  
  • தேங்காய்ப்பூ - 1 1/2 சுண்டு 
  • மாவாக்கிய சர்க்கரை/ கற்கண்டு - 1/2 சுண்டு 
  • ஏலப்பொடி - 1தே. க (மட்டமாக)
  • வறுத்த அரிசிமாவு - 1சுண்டு 
  • உப்பு - அளவிற்கு
  • தேங்காயெண்ணை - 3 மே. க 
  • மஞ்சள்தூள் - அளவிற்கு

செய்முறை 

  1. பாசிப்பருப்பை முக்கால் பதமாக அவித்து வடித்தெடுத்துக் கொள்க. பின்பு அவ்வடித்த பருப்பினில் தேங்காய்ப்பூ, சர்க்கரை என்பவற்றைக் கொட்டிக் கலந்து அடுப்பில் வைத்துச் சர்க்கரை என்பவற்றைக் கொட்டிக்கலந்து அடுப்பில் வைத்துச் சர்க்கரை முற்றாகக் கரையும் வரை கிளறிச் சர்க்கரைப்பாகு தடிக்கத்  தொடங்கும் போது ஏலப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிக் கொள்க.

  2. அரிசிமாவை அரித்துப் பாத்திரத்திலிட்டு அளவிற்கு உப்புநீரும்,1மே.க தேங்காயெண்ணையும் விட்டு விரல்களால் நன்றாகப் பிசிறிச் சேர்த்துக் கொண்ட பின்பு,நன்றாக பொங்கிக் கொதிக்க நீரும் சிறிதளவு குளிர்நீரும் அளவிற்கு விட்டுக் கையிலொட்டாத பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்துக் கொள்க.

  3. பின்பு குழைத்த மாவை இடியப்பவுரலில் அடைத்து எண்ணெய் பூசிய வாழையிலைத் தூண்டினில் மெல்லிய இடியப்பங்களாக பிழிந்து, அதன் நடுவே தயாரித்து வைத்துள்ள பாசிப்பருப்புக் கலவையில் 1 மேசைக் கரண்டியளவை வைத்துக் கொண்டபின் இலையுடன் சேர்த்துப் பாதியாக மடித்து விளிம்புப் பகுதிகளை மெதுவாக அமர்த்திக் கொண்டபின்பு இடியப்பத்தட்டில் இரண்டிரண்டாக வைத்து ஆவியில் அவித்தெடுத்து ஆறிய பின்பு பரிமாறலாம்.

குறிப்பு

  • வாழையிலைக்குப் பதிலாக லஞ் பேப்பர் அல்லது   குறிப்பு சாதாரண பேப்பர் பவிக்காலம்.

  • லவேரியாவிற்று கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் பொருட்களை எடுத்து மோதகம், கொழுக்கட்டை என்பவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம்.

  • நன்றாக முறுக வறுத்த அரிசி மாவாயின் மோதகம், கொழுக்கட்டை என்பவற்றின் மேற்பரப்புக்கள் வெடித்துக் கொள்ளுமாகையால் இவற்றிக்கு அரிசிமாவை ஓரளவாக வறுக்க வேண்டும்.

  • ஏலக்கப்பொடிக்குப் பதிலாக அரைத்  தேக்கரண்டி மிளகுத்தூள், அரைத் தேக்கரண்டி சீரகமா என்பவற்றையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

  • ஒரு சுண்டு அரிசிமாவில் 20-25 வரையான மோதகங்களைத் தயாரித்துக் கொள்ளலாம். 

Post a Comment

0 Comments