Jam Roll Cake Recipe - ஜாம் ரோல் கேக்

 

ஜாம் ரோல் கேக் செய்வது எப்படி? ரெசிபி தமிழில்! இது ஓர் இன்ஸ்டன்ட் கேக் செய்முறையாகும். மிகவும் இலகுவான தயாரிக்க கூடிய ஒரு கேக் ரெசிபியாகும். அதன் எளிய செய்முறையை இங்கே காணலாம்!

15 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • சீனி - 175 கிராம் 
  • மா - 150 கிராம் 
  • முட்டை - 3
  • ஸ்ரோபரி ஜாம் - 6 மே. க 

செய்முறை 

  1. மாவை 5 முறை அரித்துக் கொள்க.

  2. முட்டையை உடைத்துப் பாத்திரத்தில் விட்டு, சீனியை சேர்த்து சீனி முற்றாக கரையும் வரை அடித்துக்கொள்க.

  3. சீனி  கரைந்தபின் அரித்த மாவைச் சிறிது சிறிதாகத்  தூவி சேர்த்து 1 மே.க பாலைவிட்டு அடித்தபின் ஓயில்பேப்பர் பரவி மாஜரின் பூசிய கேக் தட்டில் 1 அங்குலத்  தடிப்பாக ஊற்றி 400 பரணட் இல் 10 நிமிடக்கள் பேக் செய்து எடுத்துக் கொள்க.

  4. நன்றாக ஆறிய கேக்கை, நடுவாகப்  பிளந்து இரண்டு படையாக எடுத்து,  ஒரு பகுதிக்கு 3 மேசைக் கரண்டி ஜாமை பரவலாக பூசி, கேக்கை ரோல் செய்து குளிரூட்டியில் வைத்தெடுத்துத் துண்டுகளாக வெட்டிக் கொள்க.

       

Post a Comment

0 Comments