Homemade Honey Cake Recipe - தேன் கேக்

சுவையான ஹனி கேக் செய்முறை தமிழில்: வீட்டில் எந்தவொரு நிகழ்விற்கும் இந்த எளிதான மற்றும் சுவையான தேன் கேக் செய்முறையை தயாரித்து நிகழ்வை மேலும் சிறப்பாக்குங்கள்.

 40 துண்டுகள் 

 தேவையான பொருட்கள் 

  • மாஜரின் - 1/2கப் 
  • சீனி - 2/3கப் 
  • தேன் - 1/2 கப் 
  • பால் - 1/4 கப் 
  • பேக்கிங் பவுடர் - 1 தே.க (நிரப்பி)
  • பிளம்ஸ் - 125கிராம் 
  • மா - 2 கப் 
  • நொருக்கிய கறுவா - 1தே.க (நிரப்பி)
  • சி .வெ .கஜீ - 125கிராம் 
  • இஞ்சி( துண்டாக வெட்டியது ) - 1தே.க (நிரப்பி)
  • அப்பச் சோடா - 1/2 தே.க

செய்முறை 

  1. மாவுடன் பேக்கிங் பவுடர் 5  முறை அரிக்குக.

  2. மாஜரினை  பாத்திரத்திலிட்டு, சீனியை சேர்த்து சீனி கரையும் வரை அடித்து அதனுள் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து விட்டு அடித்துக் கொண்டபின் தேனைச் சேர்த்து அடிக்குக.

  3. அடித்த கலவையுள் பாலில் அப்பச்சோடாவைக் கரைத்து விட்டு கஜீ, பிளம்ஸ் என்பவற்றையும் சேர்த்து அடித்து அரித்த மா, கறுவாத்தூள், இஞ்சித்துருவல் என்பவற்றை இட்டு கலந்தபின் ஓயில்பேப்பர் பரவி மாஜரின் பூசிய கேக் தட்டிலூற்றி 350 பரணட் இல் 30 நிமிடம் பேக் செய்து எடுத்து ஆறியபின் நீள்சதுரத் துண்டுகளாக வெட்டிச் செலோபன் பேப்பரில் சுற்றி  பரிமாறலாம்.     


Post a Comment

0 Comments