Homemade Pizza Recipe - வீட்டில் பீஸ்ஸா செய்யயும் முறை

எளிதான செய்முறையுடன் வீட்டில் பீஸ்ஸா செய்வது எப்படி? ரெசிபி தமிழில்! இன்றே உங்கள் வீட்டில் மிருதுவான மற்றும் இச் சுவையான பிஸ்ஸா ரெசிபியை முயட்சி செய்யுங்கள்!

2-4 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • கோதுமைமா - 1 சுண்டு நிரப்பி 
  • ஈஸ்ட் - 1 சிட்டிகை 
  • முட்டை - 2
  • மாஜரின் - 2 மே.க (50 கிராம்)
  • சீஸ் - 250 கிராம் 
  • தக்காளி சோஸ் - 4 மே.க 
  • பம்பாய் வெங்காயம் - 1 பெரியது 
  • கோவா - 50 கிராம் 
  • கரட் - 100 கிராம் 
  • லீக்ஸ் - 100 கிராம் 
  • உப்பு - அளவிற்கு 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • கோழி இறைச்சி / இறால் - 500 கிராம்
  •  சில்லி சோஸ் - 1 தே.க 
  • கோதுமைமா -1 மே.க (பலகைக்கு பூசுவதற்கு)

செய்முறை 

  1. கோதுமைமாவை அரித்து பாத்திரத்திலிட்டு அளவிற்கு உப்புத்தூள் , ஈஸ்ட் , மாஜரின் என்பவற்றையிட்டு நன்கு பிசிறித்சேர்த்தபின் முட்டைகளை உடைத்துவிட்டு நன்றாகப் பிசைந்து அளவிற்கு  தண்ணீர்விட்டுப் பற்றீஸ்மாப் பதத்திற்குக் குழைத்து 8 மணி நேரத்திற்கு மூடிவைத்துக் கொள்க.

  2. மரக்கறி வகைகள் , வெங்காயம் என்பவற்றைத் துப்பரவு செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கழுவி நீர் ஒரு துளிகூட இல்லாமல் வடியவிட்டெடுத்து உப்புத்தூள் , மிளகுதூள் என்பவற்றை அளவிற்கு சேர்த்துக் கலந்து கொள்க.

  3. இறைச்சியைத் துப்பரவு செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்புத்தூள் இட்டு  அவித்தெடுக்க.

  4. பின்பு அவித்த இறைச்சிக்கு சிலி சோஸ் விட்டுக் கலந்து வைக்குக.

  5. சீசை ஸ்கிரேபரில் துருவி அல்லது கத்தியால் சிறு சிறு துண்டாக வெட்டி எடுத்துக் கொள்க.

  6. குழைத்த மாக்கலவையை நன்கு சம பகுதியாகப் பிரித்து உருண்டைகளாக்கி ஒவ்வொரு உருண்டைகளையும் தனித்தனியாக எடுத்து மாப்பூசிய பலகையில் வைத்து 1/8 அங்குலத் தடிப்பான பெரிய தோசையளவு பருமனுள்ள வட்டமாக உருட்டியெடுத்து எண்ணெய் பூசிய கேக் தட்டில் வைத்து ஒவ்வொன்றிற்கும் 1 மேசைக்கரண்டி தக்காளி சோஸைப் பரவலாகப் பூசி, அதன் மேல் மரக்கறி வகைகளை ஒரு படை பரவி, அதன் மேல் இறால் அல்லது இறைச்சி என்பவற்றைப் பரவி, மேலே சீஸ் தூளை மரக்கறி வகைகள் மறையும்படி பரவி அவிணில் வைத்து பேக் செய்து எடுக்குக. (சீஸ் தூள் கூடுதலாகப் பாவிப்பதைப் பொறுத்து சுவை அதிகமாகவிருக்கும் )

குறிப்பு 

இறால் , இறைச்சி இரண்டையும் கலந்தும் தயாரிக்கலாம்.

Post a Comment

0 Comments