Grape Wine Recipe - திராட்சை வைன்

வீட்டிலேயே இலகுவாக தயாரிக்க கூடிய கிரேப்ஸ்/ திராட்சை வைன் ரெசிபி தமிழில். மிகவும் எளிதான வழிமுறைகளை பின்பற்றி சுவையான இத்திராட்சை வைனை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

 6 - 7 போத்தல் 

தேவையான பொருட்கள் 

  • திராட்சைப்பழம் - 2 கிலோகிராம் 
  • தண்ணீர் - 6 போத்தல்  / 24 தம்ளர் 
  • சீனி - 2 கிலோகிராம் 
  • ஈஸ்ட் - 1 மே . க (நிரப்பி)
  • ஏலம் - 20
  • கராம்பு - 20 
  • றஸ்க் - 1 சிறியது 
  • சுடுநீர் - 4 மே . க 
  • சீனி - 6 மே .க 

செய்முறை

  1.  திராட்சைப்பழங்களை கழுவி பாத்திரத்தில் போட்டு 6 போத்தல் தண்ணீர் விட்டு அவியவிடவும். பழங்கள் நன்றாக அவிந்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து  இறக்கிவைத்துக் கொள்க.

  2. பின்பு 5 மே . க சீனியை தாச்சியிலிட்டு அடுப்பில் வைத்து சீனியை வறுக்கவும். சீனி முழுவதும் உருகிப் பாகாகக் கரைந்து கரு நிறத்தையடைந்ததும் இறக்கித் திராட்சைப்பழக் கலவையில் ஊற்றி நன்கு கலக்கி 2 கிலோ சீனியுமிட்டுக் கரைத்துக் கொள்க.

  3. பின்பு 4 மேசைக்கரண்டி இளஞ்சூடான நீரில் ஈஸ்டையும் 1 மே . க சீனியையும் கரைத்து, அதனுள் ரஸ்க்கைப் போட்டு ஒரு மணிநேரம் வரை வைத்துக்கொண்ட பின்பு அதனை திராட்சைப்பழக் கலவையுள் ஊற்றி பிளாஸ்டிக் வாளியில் விட்டு மூடி ஒருவாரம் வரை வைத்துக்கொள்க.

  4. ஒரு வாரத்தின் பின்பு இக்கலவையை எடுத்து ஒரு வடியின்மேல் ஒகன்ரி துணியை விரித்து ஊற்றி வடித்தெடுத்துக் கொள்ளலாம். வைனைப் போத்தல்களில் அடைத்து ஈரலிப்பான மண்ணில் புதைத்து வைத்து நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தலாம்.           

Post a Comment

0 Comments