Grape Rasam Recipe- திராட்சை ரசம்

 

திராட்சை ரசம் தயாரிப்பதற்கான ரெசிபி தமிழில். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய மற்றும் ஆரோக்கியமான திராட்சை ரசத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிக.

3 - 4 போத்தல் திராட்சை ரசம்

தேவையான பொருட்கள் 

  • திராட்சைப்பழம் - 2 கி .கிராம்
  • சீனி - 2 கி .கிராம்
  • சித்திரிக்கமிலம் - 25 கிராம் 
  • தண்ணீர் - 3 தம்ளர் 

செய்முறை 

  1. திராட்சைப்பழங்களைக் கழுவிப் பாத்திரத்திலிட்டு 1 தம்ளர் தண்ணீர்விட்டு அவியவிடவும். பழங்கள் நன்றாக அவிந்ததும் இறக்கி ஆறவைத்து நன்றாகக் கடைந்து ஓர் ஒகன்ரித் துணியில் ஊற்றி வடித்துச் சாறை மட்டும் எடுத்துவைத்துக்கொள்க. அல்லது பழங்களை அவிக்காமல் மிக்சியில் இட்டு அடித்தெடுத்துக் கொள்ளலாம்.

  2. பின்பு பாத்திரத்தில் சீனியையிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. சீனி முழுவதும் கரைந்து பாகு நன்றாகப் பொங்கிக் கொதிக்கத் தொடங்கியதும் திராட்சைச் சாற்றைக் கலந்து காய்ச்சிப் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிப் பாகு ஓரளவு ஆறியதும் சித்திரிக்கமிலம் இட்டுக் கலந்து நன்றாக ஆறிய பின்பு தொற்று நீக்கிய போத்தல்களில் அடைத்துவைத்துத் தேவையேற்படும்போது அளவாகத் தண்ணீர் கலந்து பரிமாறலாம்.        

Post a Comment

0 Comments