Ghee Rice Recipe - சுவையான நெய் சோறு செய்முறை


நெய் சோறு ரெசிபி தமிழில். நெய் சோறு  மிகவும் எளிதாக வீட்டில் மதிய உணவுக்காக தயாரிக்க கூடிய ஓர் ரெசிபியாகும். இன்றே வீட்டில் செய்து சுவையுங்கள்.

 4 பேருக்கு போதுமனாது

தேவையான பொருட்கள் 

  • சம்பா அரிசி - 500 கிராம் 
  • உருளைக்கிழக்கு - 250 கிராம்
  • நெய் - 250 மல்லிலிட்டர் / மாஜரின் 200 கிராம் 
  • கயூ - 50 கிராம் 
  • பிளம்ஸ் - 50 கிராம் 
  • கருவாப்பொடி - 1தே .க .(மட்டமாக )
  • மஞ்சள்தூள் - 1தே .க.(நிரப்பி )
  • உப்பு - அளவுக்கு 
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மே .க .(நிரப்பி )
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 750 சுண்டு 
  • றம்பை (2'' நீளத்துண்டு ) - 4
  • ஆட்டெலும்பு - 250 கிராம் 
  • இறைச்சி - 250 கிராம் 
  • கறிமிளகாய்த்தூள்  - 1 தே .க .(நிரப்பி )
  • ஏலம் - 15
  • தேங்காய்ப்பால் - 4.மே .க
  • மிளகுத்தூள் - அளவிற்கு 
  • வினாகிரி / பப்பபால் - 1 மே .க 
  • சோயா சோஸ் - 2 மே .க 
  • தக்காளி சோஸ் - 2 மே .க 

செய்முறை 

  1. பாத்திரத்தில் எலும்பை சிறு துண்டாக வெட்டிப்போட்டு 4 1/2 - 5 சுண்டு வரையான தண்ணீர் விட்டு ,மச்சாள்த்தூள் ,உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு மூடி அவிய விடவும். (அரிசின் தன்மையைப் பொறுத்து தண்ணீரின் அளவை மாற்றிக்கொள்ளவும்.)
  2. பின்பு எலும்பு அவித்த நீரை வடித்துப் பானையில் விட்டு அடுப்பில் வைத்து அரிசியைக் கழுவிப்போட்டு ஏலமும் சேர்த்து அவியவிட்டு தண்ணீர் நன்கு வற்றியதும் இறக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.
  3. இறைச்சியைக் கழுவிச் சிறு துண்டுகளாக வெட்டி அளவிற்கு உப்புத்தூள், மிளகாய்த்தூள்,வினாகிரி என்பன சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைத்துக்கொள்க.
  4. உருளைக்கிழங்கைத்  தோல் சீவிச் சிறு துண்டுகளாக வெட்டி அளவாக உப்புத்தூள் புரட்டி வைத்துக்கொள்க .
  5. கயூவைத் துப்பரவாக்கிச்  சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்க.
  6. பின்பு தாச்சியில் அரைவாசி நெய்யைக் காயவிட்டு கயூ,பிளம்ஸ் என்பவற்றைத் தனித்தனியாகப் போட்டு பொரித்தெடுத்துக்கொள்க.
  7. தாச்சியில் மிகுதியாக உள்ள நெய்யினில் வெட்டிய உருளைக்கிழங்கைப் போட்டுப் பொரித்தெடுத்துக் கொள்க.
  8. மீண்டும் மிகுதியாக உள்ள நெய்யினில் வெட்டிய வெங்காயத்தில் அரைவாசியைப் போட்டு   வதங்கவிட்டு அதனுள் கறிவேப்பிலை,றம்பை என்பனவும் போட்டு வதக்கி,அதனுள் இறைச்சியைக் கொட்டி நன்கு புரட்டி வதங்கவிட்டபின் கறுவாத்தூள், மிளகுத்தூள், தேங்காய்ப்பால், சோயா சோஸ்,தக்காளி சோஸ் முதலியவற்றையிட்டு மூடி அவியவிட்டு நீர் வற்றியதும் இறக்கி கொள்ளவும்.
  9. பின்பு பெரிய தாச்சியில் மிகுதி அரைவாசி நெய்யைக் கயாவிட்டு, மிகுதியாகவுள்ள வெங்காயத்தைப் போட்டு வாசம் வரும்வரை வதங்கவிட்டு, அதனுள் ஆறவைத்துள்ள சோறு,இறைச்சி,பொரித்து வைத்துள்ள கயூ, பிளம்ஸ், உருளைக்கிழங்கு என்பவற்றைக் கொட்டி ஒரு கரண்டிக் காம்பினால் நன்கு கிளறி இறக்கிக்கொண்டு கோழிக் குருமா அல்லது  இறைச்சிக்கறி என்பவற்றுடன் பரிமாறலாம்.

Post a Comment

0 Comments