Fruit Cake Recipe - புறுட் கேக்

எளிதாக வீட்டில் தயாரிக்கக்கூடிய பழ கேக் ரெசிபி தமிழில்! மிகவும் எளிதான மூலப்பொருட்களை பயன்படுத்தி இந்த சுவையான பழ கேக்கை வீட்டில் செய்து சுவையுங்கள்.


 தேவையான பொருட்கள் 

  • மாஜரின் - 250 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • ரவ்வை - 100 கிராம் 
  • கோதுமை மாவு - 150 கிராம் 
  • பேரீச்சம்பழம் - 500கிராம் 
  • பிளம்ஸ் - 100 கிராம் 
  • கன்டீற்பீல் - 50 கிராம் 
  • கஜீ - 100 கிராம் 
  • முட்டை - 5
  • சாதிக்காய் தூள் - 1 தே. க (மட்டமாக)
  • பேக்கிங் பவுடர் - 1 தே. க (நிரப்பி)
  • தேன் - 1/2 தம்ளர் 
  • கொதிநீர் - 1/2 தம்ளர் 
  • அப்பச்சோடா - 1 தே.க (மட்டமாக)
  • ஓரஞ்சு யூஸ் - 2 மே . க 

செய்முறை 

  1. பேரீச்சம்பழத்தை துப்பரவாக்கி விதைகளை நீக்கிச்  துண்டுகளாக வெட்டிப் பாத்திரத்திலிட்டு 1 தே. க அப்பச்சோடாவும் இட்டுக் கலந்து 1/2 தம்ளர் கொதி நீரை ஊற்றி இரண்டு மணிநேரம் மூடி வைத்துக் கொள்க. 

  2.  கஜீ, பிளம்ஸ், கன்டீற்பீல் என்பவற்றை துப்பரவாக்கிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.

  3. கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை அரித்துக் கொள்க.

  4. பாத்திரத்தில் மாஜரினைப் போட்டுச் சீனியும் சேர்த்து, சீனி கரையும் வரை  அடித்துக் கொண்ட பின்பு, அதனுள் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து விட்டு அடித்துக் கொள்க.

  5. பின்பு  முட்டை கலவையினுள்  அரித்த ரவ்வையைச் சிறிது சிறிதாகத் தூவி நன்றாகச் சேர்த்துக் கொண்டபின் அரித்து வைத்துள்ள மாவையும் சேர்த்துக் கலந்து அதனுள் வெட்டி வைத்துள்ள பேரிச்சம் பழம், கஜீ, பிளம்ஸ், ஓரஞ்சு யூஸ், கன்ரீஸ்பீல், தேன், சாதிக்காய் தூள் என்பவற்றை சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.

  6. பின்பு கேக் தட்டிற்கு ஓயில் பேப்பரை பரவி மாஜரின் பூசிக் கொண்ட பிறகு கேக் கலவையை ஊற்றி பேக் செய்து கொண்டு ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி எடுத்துப் பரிமாறலாம்.          

Post a Comment

0 Comments