Flavored Milk Recipe - சுவையூட்டிய பால்

சுவையூட்டிய பால் ரெசிபி தமிழில். இது ஒரு எளிய மற்றும் இலகுவான செய்முறையாகும், சில அடிப்படை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி மாறுபட்ட ஓர் சுவையூட்டிய பால் பானத்தை தயாரித்து ருசியுங்கள்.

6 - 7 சிறிய போத்தல்கள் 

தேவையான பொருட்கள் 

  • பால் மா - 90 கிராம் 
  • தண்ணீர் - 1 லீற்றர் 
  • சீனி - 125 கிராம்
    (இவற்றுக்கு பதிலாக பசுப்பால் 2 லீற்றர் , சீனி 300 கிராம்)
  • கொக்கோப் பவுடர் - 1 மே . க (நிரப்பி) அல்லது வானிலை - 1 மூடி 

செய்முறை 

  1. பால்மா , சீனி என்பவற்றை ஒன்றாக கலந்து 70C வெப்பமான தண்ணீர் விட்டுக் கரைக்கவும்.

  2. பின்பு கரைசலிற்குள் கொக்கோ பவுடர் , அல்லது வனிலா சேர்த்துக் கரைத்துக் கொள்க.

  3. போத்தல்களைத் தண்ணீருள்ள பாத்திரத்துள் இட்டு அடுப்பில் வைத்து தண்ணீர் நன்றாகப் பொங்கிக் கொதித்ததும் போத்தல்களில் கைபடாமல் எடுத்து சிறிது நேரம் கவிழ்த்து வைத்தபின் கரைத்து வைத்துள்ள பாலை போத்தல்களின் வாயிலிருந்து 1 1/2'' கீழ் இருக்கும் வண்ணம் ஊற்றுக.

  4. போத்தல் மூடிகளை 1 கிராம் S.M.S இல் கரைத்த தண்ணீரிலிட்டு 10 நிமிடம் வைத்து எடுத்து தொற்று நீக்கிய பின் போத்தல்களை அடைத்துக் கொள்க.

  5. பின்பு பிறசர் குக்கரில் 2/3 பகுதிக்குத் தண்ணீர் விட்டு பால் அடைத்த போத்தல்களை குக்கரினுள் அடுக்கி வைத்து மூடி அடுப்பில் 20 நிமிட நேரத்திற்கு வைத்து 121C வெப்பம் வரும்வரை சூடாக்கி இறக்கிப் போத்தல்களை எடுத்துக் கழுவிக் கொண்ட பின்பு பாலை 2 மாதம் வரை வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

Post a Comment

0 Comments