Fish Soup Recipe - மீன் சூப்

 

மீன் சூப் என்பது மீன், காய்கறிகள்  ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படக்கூடிய ஒரு நான்வெஜ் சூப் ஆகும். படிப்படியான வழிமுறைகள் உட்பட செய்முறையை தமிழில் இங்கே காணலாம்.

4 - 6 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • கோவா - 100 கிராம் 
  • வெங்காயம் - 150 கிராம் 
  • கரட் - 150 கிராம் 
  • உருளைக்கிழங்கு - 150 கிராம் 
  • சிக்கின் கியூப் கட்டி - 02
  • சோயா சோஸ் - 2 மே . க 
  • மிளகுதூள் - 1 தே . க 
  • கோன் பிளா - 2 மே .க 
  • மீன் துண்டுகள் - 4 - 6
  • மஞ்சள்தூள் - அளவிற்கு 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • தக்காளிப்பழம் - 100 கிராம் 
  • உள்ளி - 4 பல்லு 
  • போஞ்சி - 150 கிராம் 

செய்முறை 

  1. மீனிற்கு உப்பு , மஞ்சள்தூள் , 1 சிக்கின் கியூப் கட்டி சேர்த்து தண்ணீர் அளவிற்கு விட்டு அவித்தெடுத்துக் கொள்க.

  2. கோவா , கரட் , வெங்காயம் , உருளைக்கிழங்கு , போஞ்சி , உள்ளி என்பவற்றை துப்பரவாக்கிப் பெரிய துண்டுகளாக வெட்டி , 1சிக்கின் கியூப் கட்டியுமிட்டு 6 தம்ளர் தண்ணீரும் விட்டு மூடி அவியவைக்குக. மரக்கறிவகை முக்கால் பதமாக அவிந்தவுடன், உப்புத்தூள், தக்காளிப்பழம், மிளகுதூள், சோயாசோஸ் என்பவற்றையிட்டு 1 தம்ளர் தண்ணீரில் கரைத்த கோன் பிளா கலவையும் விட்டு மீன் துண்டுகளையுமிட்டுச் சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கிக் கொள்க.

  3. நூடில்ஸிற்குக் கறியாகப் பாவித்துக் கொள்ளலாம்.  

Post a Comment

0 Comments