Egg Coffee Recipe - முட்டைக் கோப்பி

 

முட்டை கோப்பி செய்முறை தமிழில். முட்டையின் மஞ்சள், சர்க்கரை மற்றும் காபி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் ஆரோக்கியமான கோப்பி இது. முழுமையான  ரெசிப்பியையும் தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

1 ஆளுக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • முட்டை - 1
  • சீனி - 2 மே . க  
  • கோப்பித்தூள் - 1 தே . க 
  • கொதிநீர் - 1 தம்ளர் 

செய்முறை 

  1. முட்டையை உடைத்துப் பாத்திரத்தில் விட்டு சீனியையும் சேர்த்து நன்றாக நுரைபொங்கும் வண்ணம் அடித்துக் கொள்க.

  2. கோப்பித்தூளை பிறிதொரு பாத்திரத்திலிட்டு 1 தம்ளர் கொதிநீர் விட்டு நன்றாக கலக்கிக் கொள்க.

  3. பின்பு அடித்த முட்டையுள்ள பாத்திரத்தில் சூடான கோப்பியைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கொண்டு கரண்டியால் இடைவிடாது கலக்கி மேற்பரப்பில் மிதந்து வரும் நுரையை அகற்றிக் கொண்டபின் சூடாக இருக்கும் போதே பரிமாற வேண்டும்.   

Post a Comment

0 Comments