Special Dubai Bread Recipe - துபாய் ரொட்டி

ஸ்பெஷல் துபாய் ரொட்டி ரிஸிபி தமிழில். நம்பமுடியாத அளவிற்கு எளிமையாக மற்றும் விரைவாக செய்யக்க்கூடிய  ஒரு எளிய காலை உணவு. ரெசிபி தமிழில்!

8 ரொட்டிகள்

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு : 1/4 கி. கிராம்
  • கரட் : 100 கிராம்
  • லீற்ஸ : 100 கிராம்
  • உருளைக்கிழங்கு : 100 கிராம்
  • கறிமிளகாய் : 100 கிராம்
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் : 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் : 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
  • மிளகுதூள் : அளவிற்கு
  • உப்புத்தூள் : அளவிற்கு
  • மாஜரின் அல்லது தேங்காயெண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  • முட்டை : 1

செய்முறை

  1. கரட், லீற்ஸ், உருளைக்கிழங்கு, கறிமிளகாய் என்பவற்றைக் கழுவிச் சிறிதாக வெட்டிக் கொள்க.
  2. கோதுமை மாவை அரித்து வைத்துக் கொள்க.
  3. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்துவிட்டு நன்கு அடித்துக் கொள்க.
  4. தாச்சியில் 1 மேசைக்கரண்டி மாஜரினையிட்டுக் காயவைத்து, அதனுள் வெட்டிய மரக்கறி வகைகளைப் போட்டு அரைப்பதமாக வதங்கவிட்டு, வதங்கிய பின் அதனுள் வெட்டி வைத்துள்ள பச்சைமிளகாய், வெங்காயம் என்பவற்றைப் போட்டுச் சேர்த்து, மூடி வதங்க விடவும்.
  5. மரக்கறி வகைகள் வதங்கியவுடன் உப்புத்தூள், மிளகுதூளைப் போட்டுச் சேர்த்து இறக்கிக்கொள்க.
  6. பின்பு அரித்துவைத்துள்ள மாவைப் பாத்திரத்திலிட்டு வதங்கிய மரக்கறிகளையும் போட்டுச் சேர்த்துக் கொண்டபின், அடித்து வைத்துள்ள
  7. முட்டையைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து, தண்ணீரும் அளவிற்கு விட்டு ரொட்டிமாப் பதத்திற்கு குழைத்து எட்டு சம அளவான உருண்டைகளாக உருட்டிவைத்துக் கொள்க 
  8. பின்பு தோசைச் சட்டியில் சிறிதளவு மாஜரினையிட்டுப் பரவிக் கொண்ட பின், ஒவ்வொரு உருண்டையாக எடுத்து ஒரு அப்பளமளவு வட்டமாகத் தட்டிச் சட்டியில் ஒவ்வொன்றாகப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுத்துக் கொள்க. ஆனால் ஒவ்வொரு முறையும் ரொட்டி வேகவைக்க முன் எண்ணெய் பூசுதல் வேண்டும்.

குறிப்பு

  1. இதற்கு முட்டை சேர்க்காமல், தண்ணீரை அளவிற்கு விட்டும் குழைத்துக்கொள்ளலாம்.
  2. நோயாளிகளுக்காயின் மரக்கறிவகைகளை நீராவியில் அவித்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments