Dhal Soup Recipe - பருப்பு சூப்

இது ஒரு சுவையான வெஜ் பருப்பு சூப். ரெசிபி தமிழில் இங்கு பெற்றுக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியமானது மற்றும் எளிதானது, வீட்டிலேயே இலகுவான தயாரிக்க கூடியது. இன்றே முயற்சி செய்யுங்கள்.

 3 - 4 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • பருப்பு - 100 கிராம் 
  • வெங்காயம் - 50 கிராம் 
  • உள்ளி - 5 பள்ளு 
  • மாஜரின் - 1 மே . க 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • மஞ்சள்தூள் - 2 சிட்டிகை 
  • கருவேப்பிலை - 1 நெட்டு 

செய்முறை 

  1. பருப்பைத் துப்பரவாக்கிக் கழுவிப் பாத்திரத்திலிட்டு 4 தம்ளர் தண்ணீர் விட்டு அவிய வைக்குக.

  2. வெங்காயம் , உள்ளி என்பவற்றைத் துப்பரவாக்கிக் கழுவிச் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்க.

  3. பருப்பு முக்கால் பதமாக அவிந்தவுடன் 2 மே.க பருப்பை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மிகுதிப் பருப்பைத் தண்ணீருடன் சேர்த்துக் கிரைண்டரிலிட்டு அடித்தெடுத்துக் கொள்க.

  4. தாச்சியில் மாஜரீனையிட்டு உருகியதும் வெங்காயம் , உள்ளி என்பவற்றையிட்டு வதங்கவிட்டு, வதங்கியதும், அரைத்த பருப்புக் கலவை, பருப்பு என்பன இட்டு அளவிற்கு உப்புத்தூள், மிளகுதூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து இறக்கிக் கொள்க. 

Post a Comment

0 Comments