Date cake Recipe Tamil - பேரீச்சம்பழக் கேக்

சுவையான பேரீச்சம்பழக் கேக் ரெசிபி தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்! இந்த இலகுவான ரெசிபியுடன் ஓர் சுவையான கேக்கை தயாரித்து உங்கள் தேநீர் நேரத்தை மேலும் ருசியாக்குங்கள்.
 
50 - 55 துண்டுகள் (1 1/2'' x 1 1/2'')

தேவையான பொருட்கள் 

  • ரவ்வை - 250 கிராம் 
  • கோதுமை மாவு - 500 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  •  மாஜரின் - 500 கிராம் 
  • பேரீச்சம்பழம் - 1000 கிராம் 
  • ரின் பால் - 2 ரின் (2 x 397 கிராம் )
  • பிளம்ஸ் - 100 கிராம் 
  • சிறிதாக வெட்டிய கஜு - 250 கிராம் 
  • சாதிக்காய் தூள் - 1 தே.க(மட்டாக)
  • கொதிநீர் - 1 தம்ளர் 
  • வனிலா - 2 மே. க 
  • தேயிலை - 1 மே .க (நிரப்பி )

செய்முறை 

  1. பேரீச்சம்பழத்தைத் துப்பரவாக்கிக் கழுவி விதை நீக்கிச் சிறு சிறு துண்டுகளாக   வெட்டிப் பாத்திரத்திலிட்டு ஒரு தேக்கரண்டி அப்பச்சோடா தேயிலை என்பவற்றையிட்டுக் கலந்து 2 தம்ளர் கொதி நீரூற்றி மூடி ஆறு மணி நேரம் வைத்துக் கொள்க .

  2. கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை அரித்துக் கொள்க.

  3. பாத்திரத்தில் மாஜரினையிட்டுச் சீனியும் சேர்த்து சீனி கரையும் வரை நன்கு அடித்துக் கொண்ட பின்பு, அதனுள் ரின் பாலையும், வெட்டி வைத்துள்ள பேரீச்சம்பழக் கலவையையும் சேர்த்தடித்துக் கொள்க.

  4. பின்பு அடித்த கலவையில் அரிந்து வைத்துள்ள மா, ரவ்வை என்பவற்றைச் சிறிது சிறிதாகத் தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கொண்ட பின்பு பிளம்ஸ், சிறிதாக வெட்டிய கஜு, சிறிதாக வெட்டிய கன்டீற்பீல், சாதிக்காய்த்தூள், வனிலா என்பன சேர்த்து நன்கு கலந்து கொண்ட பின்பு கேக் தட்டிற்கு ஓஜில் பேப்பர் பரவி மாஜரின் பூசிக்கொண்ட பின்பு, கேக் கலவையை ஊற்றி பேக் செய்து ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி எடுத்துப் பரிமாறலாம்.   

Post a Comment

0 Comments