Refreshing Cordial Recipe - கோடியல்

இந்த கோடையில், அன்னாசிப்பழத்துடன் தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான கோடியல் பானத்தை ருசியுங்கள். புத்துணர்ச்சியூட்டக்கூடிய இப்பானத்தின் ரெசிபி தமிழில்!

2 போத்தல் 

தேவையான பொருட்கள் 

  • அன்னாசி / பசன் பழச்சாறு - 500 கிராம் (சதை மட்டும் )
  • சீனி - 600 கிராம் 
  • தண்ணீர் - 650 மி . லீ 
  • (S .B.) சோடியம் பென்சொயிட் - யோக்கற் கரண்டியால் மாட்டாக 

செய்முறை 

  1. அன்னாசிப் பழச் சதையை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டியெடுத்து கிரைண்டரிலிட்டு அடித்து வடித்தெடுத்துக் கொள்க.

  2. பசன் பழம் ஆயின் அரித்தட்டில் பழ உள்ளுடலையிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கைகளால் தேய்த்து விழுதை எடுக்கவும்.

  3. சிறிதளவு சீனியுடன் சோடியம் பென்சோயிட்டு சேர்த்து வைத்துக் கொள்க.

  4. மிகுதிச் சீனியுடன், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துப் பாகு பொங்கிக் கொதிக்கும்வரை காச்சி இறக்கி, 10 நிமிடத்திற்கு ஆறவைத்து, பழச்சாறு சேர்த்து கலக்கிக் கொண்ட பின் கலவையை ஒகன்ரியில் வடித்தெடுத்துக் கொள்ளவும்.

  5. பின்பு கலவையை அடுப்பில் வைத்து 20 நிமிடங்களுக்கு 90C இற்கு வெப்பமாக்கி அடுப்பிலிருந்து இறக்கி அவித்தெடுத்த போத்தல்களில் சூட்டுடனையே ஊற்றி அடைத்து சீல் பண்ணவும்.       

Post a Comment

0 Comments