Smart Cooking Tips - சமையல் குறிப்புகள்

சில சுவாரஸ்யமான சமையல் நுட்பங்களையும், சிறந்த சமையல் குறிப்புகளையும் உங்களுக்காக வழங்குகிறோம். ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை சமைக்க உங்களுக்கு இவை உதவும் என்று நம்புகிறோம்

 இல்லத்தரசிகளுக்கு சில குறிப்புகள் 

  • ரசம்  வைக்கும் போது தக்காளியை முதலிலேயே சேர்ப்பதற்குப் பதிலாக ரசம் வைத்து முடிந்ததும் தக்காளியைத் துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சேர்த்துவிட்டால், ரசம் சுவையாக இருக்கும்.

  • பாயாசத்தில் முந்திரியை வறுத்து சேர்க்கும்  போது கறுத்து விடாமல் இருக்க, ஒரு கரண்டி பாயாசத்தை எடுத்து, அதில் முந்திரியை உடைத்துப் போட்டு, மிக்சியில் அரைத்து பாயாசத்தில் சேர்த்துவிட்டால், சுவையாக இருக்கும்.

  • பால் அடிப்பிடித்து தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போட்டால் அடிப்பிடித்த வாசனை போய் விடும்.

  • இரண்டு வாழைப்பழம் மற்றும் இரண்டு மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பாயசம் தயார்.

  • பீட்ருட் அல்வா செய்யும் போது, பீட்ருட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து அல்வா செய்தால் சுவையாக இருக்கும்.

  • மோர் நிறைய மிச்சமாகி விட்டால், அதில் ஒரு மேசைக்கரண்டி துவரம் பருப்பைப் போட்டு வைத்தால் விரைவில் புளிக்காமல் இருக்கும்.

  • வாழைக்காயை ஈரமில்லாத பொலீத்தின் பையில் போட்டு இறுக்கமாகக் கட்டி  ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காமல் இருக்கும். 

Post a Comment

0 Comments