Condensed Milk Cake - ரின் பால்க் கேக்

 

சுவையான ரின் பால் கேக் ரெசிபி தமிழில்! கண்டென்ஸ்ட் பாலைப் பயன்படுத்தி எளிய முட்டையற்ற பால் கேக் செய்முறையை தயாரிப்பதற்கான படிப்படியான வழிமுறைகளைப்  தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

50 - 55 துண்டுகள் (1 1/2'' x 1 1/2'')

தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு - 400 கிராம் 
  • ரவை - 100 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • ரின் பால் (525 கிராம் ) - 1 ரின் 
  • பேக்கிங் பவுடர் - 2 மே.க (நிரப்பி)
  • பிளம்ஸ் - 100 கிராம் 
  • வெட்டிய கஜு - 100 கிராம் 
  • மாஜரின் - 250 கிராம் 
  • தண்ணீர் - 1 1/2 தம்ளர் 
  • பைனப்பிள் எசன்ஸ் - 1/2 தே.க 
  • கொக்கோ பவுடர் - 1 மே.க (நிரப்பி)

செய்முறை 

  1. ரவையைத் துப்பரவாக்கி ஓரளவாக வறுத்தெடுத்துக் கொள்க.

  2. சீனியை அரைத்து வைத்துக் கொள்க.

  3. மாவுடன் பேக்கிங் பவுடர், கொக்கோப் பவுடர் கலந்து 5 முறை அரித்துக் கொள்க.

  4. பாத்திரத்தில் மாஜரினை இட்டு சீனியும் சேர்த்து சீனி முழுமையாகக் கரையும் வரை நன்கு அடித்துக் கொண்ட பின்பு ரின் பாலை விட்டு சேர்த்துக் கொள்க.

  5. பின்பு அடித்த கலவையில் மாவைச் சிறிது சிறிதாக தூவி சேர்த்துக் கொண்ட பின்பு ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு பால் ரின்னைக் கழுவி வரும் தண்ணீரையும் சேர்த்து, வறுத்து வைத்துள்ள ரவ்வையையும் கலந்து கொண்ட பின்பு பிளம்ஸ், கஜு, பைனப்பிள் எசன்ஸ் என்பவற்றையும் சேர்த்துக் கொள்க.

  6. பின்பு கேக் தட்டிற்கு ஓஜில் பேப்பர் பரவி, மாஜரின் பூசிக் கொண்டு, கேக் கலவையை ஊற்றி பேக் செய்து ஆறிய பின்பு எடுத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.     

Post a Comment

0 Comments