Coconut Cake Recipe - தேங்காய்ப்பூக் கேக் செய்முறை


எங்கள் செய்முறையுடன் மிகவும் எளிதாக தேங்காய் கேக் வீட்டிலேயே செய்யுங்கள். ஒரு சுவையான கேக் விருந்து உங்களுக்காக. படிப்படியான செய்முறை குறிப்புகள் தமிழில்!

50-55 துண்டுகள் தேங்காய்ப்பூக் கேக்(Coconut cake) செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கோதுமை மா : 500 கிராம் 
  • மாஜரீன் : 500 கிராம் 
  • சீனி : 500 கிராம் 
  • முட்டை : 10
  • தேங்காய் : பாதி 
  • வனிலா : 2 மே.க 
  • பேக்கிங் பவுடர் : 2 தே.க (நிரப்பி)
  • பிளம்ஸ் : 100 கிராம் 
  • கஜீ : 50 கிராம் 

 செய்முறை

  1. தேங்காயைத் துருவி வெய்யிலில் நன்றாகக் காயவைத்து எடுத்துக் கொள்க
  2. மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை அரித்து வைத்துக் கொள்க
  3. பாத்திரத்தில் மாஜரினைப் போட்டுச் சீனியும் சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்க
  4. முட்டைகளைத் தனியாகப் பாத்திரத்தில் உடைத்து விட்டு வனிலாவும் சேர்த்து நுரை பொங்கும் வண்ணம் அடித்து, இந்நுரையை மட்டும் அடித்து வைத்துள்ள மாஜரின் கலவையில் சிறிது சிறிதாகவிட்டு முழுவதுமாகச் சேர்த்துக் கொண்ட பின்பு தேங்காய்ப்பூவையும் சேர்த்து அடித்துக் கொண்டு பின்பு மாவைச் சிறிது சிறிதாகத் தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கலந்து பிளம்ஸ், கஜீ என்பவற்றையும் கலந்து கொண்ட பின்பு ஒயில் பேப்பர் பரவி மாஜரின் பூசிய தட்டிலூற்றி பேக் செய்து ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டியெடுத்துப் பரிமாறலாம்.

Post a Comment

0 Comments