Chocolate Rose Cake - சொக்லற் றோஸ் கேக்

 

சாக்லேட் ரோஸ் கேக் ரெசிபியை தேடுகிறீர்களா? இதோ எங்கள் சாக்லேட் ரோஸ் கேக்கை ரெசிபியை முயற்சியுங்கள். ரெசிபி தமிழில்!. இந்த அழகான ரோஜா மற்றும் சாக்லேட் லேயர் கேக் செய்முறை எந்த ஒரு கொண்டாட்டங்களுக்கும் பொருத்தமானது

சொக்ளற்  றோஸ் கேக் 20 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு - 225 கிராம் 
  • கொக்கோ - 25 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • பிகைவ் மாஜரின் - 65 கிராம்
  • முட்டை - 5
  • பேக்கிங் பவுடர் - 1 தே. க (நிரப்பி)
  • அப்பச்சோடா - 1/2தேக்கரண்டி 
  • பால் மா - 2 மே. க 
  • மாஜரின் - 150 கிராம் 
  • ஐசிங் சுகர் - 12 மே. க (நிரப்பி)
  • கொக்கோ - 1 மே . க (நிரப்பி)
  • வனிலா - 1 மே. க 
  • ஐசிங்

செய்முறை 

  1. பால் மா, அப்பச்சோடா என்பவற்றை கலந்து 6 மே.க தண்ணீர் விட்டு கரைத்து வைக்குக.

  2. முட்டையை உடைத்துப் பாத்திரத்தில் விட்டு சீனி சேர்த்து சீனி கரையும் வரை அடித்துக் கொள்க.

  3. கோதுமைமா, கொக்கோ,பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை அரிக்குக.

  4. பிகைவ் மாஜரின் தாச்சியிலிட்டு உருக வைத்து ஆறவைக்கவும்.

  5. அடித்து வைத்துள்ள முட்டையினுள் மாவை சிறிது சிறிதாக தூவிச் சேர்த்து, அதனுள் உருகிய மாஜரின், பால்மாக் கலவை என்பன சேர்த்து அடித்து  ஓயில் பேப்பர் பரவிய கேக் தட்டில் 1/2 '' தடிப்பத்திற்கு ஊற்றி பரவி 180 பாகையில் 25 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்து ஆறியபின் 6'' அகலமுள்ள துண்டுகளாக வெட்டி மேல்ப்பரப்பிற்கு ஐசிங் பூசி உருட்டிச் சுற்றி, பேப்பரால் இறுகச் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்குக.             


Post a Comment

0 Comments