Chocolate Cake Tamil Recipe - சொக்ளற் கேக்


சாக்லேட் கேக் பலராலும் விரும்பப்படும் கேக் செய்முறையாகும். வீட்டிலேயே சுவையான சாக்லேட் கேக்கை தயாரிக்கலாம். இதோ சாக்லேட் கேக் ரெசிபி தமிழில்.

சுவையான சொக்ளற் கேக் (Chocolate Cake) வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு : 450 கிராம்
  • சீனி : 500 கிராம்
  • மாஜரின் : 500 கிராம்
  • முட்டை : 10
  • பேக்கிங் பவுடா : 2 தே.க (நிரப்பி)
  • வனிலா : 2 மே.க
  • கொக்கோ பவுடர் : 4 மே.க (நிரப்பி)

ஐசிங்

  • ஐசிங்சுகர் : 10 மே.க (நிரப்பி)
  • கொக்கோ பவுடர் : 3 மே.க (நிரப்பி)
  • மாஜரின் : 200 கிராம்
  • வனிலா :1 மே.க ( நிரப்பி )

செய்முறை

  1. சீனியை அரைத்தெடுத்துக் கொள்க.
  2. மாவுடன் கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் என்பன சேர்த்து ஐந்து முறை அரித்து வைத்துக் கொள்க.
  3. மாஜரினைப் பெரிய பாத்திரத்திலிட்டுச் சீனியையும் சேர்த்து ஒரே பக்கமாகச் சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்க.
  4. முட்டைகளை வேறோர் பாத்திரத்தில் உடைத்து விட்டு, வனிலாவும் சேர்த்து நன்றாக நுரை பொங்க அடித்து நுரையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மாஜரின் கலவையில் விட்டு அடித்துக் கொள்க.
  5. பின்பு இக் கலவையில் அரித்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகத் தூவி முழுவதுமாகச் சேர்த்து ஒரே பக்கமாக அடித்துக் கொள்க.
  6. கேக் தட்டிற்கு ஒயில் பேப்பர் பரவிச் சிறிதளவு மாஜரினைப் பூசிக் கேக் கலவையை ஊற்றிப் பரவி பேக் செய்து கொள்க.
ஐசிங்

  1. ஐசிங் சுகருடன் கொக்கோப் பவுடரைச் சேர்த்து அரித்து வைத்துக் கொள்க.
  2. மாஜரினைப் பாத்திரத்திலிட்டு ஐசிங்சுகரைச் சிறிது சிறிதாகச் சோத்து வனிலாவும் விட்டு அடித்துக் கொள்க. 
  3. பின்பு பேக் செய்த கேக்கை எடுத்து நிமிர்த்தி வைத்து ஒரு நூலையெடுத்து இருபுறமும் இழுத்துக் கொண்டு, இரண்டு சமபகுதிகளாக வரும்வண்ணம் வெட்டி ( கத்தியாலும் வெட்டிக் கொள்ளலாம் ) அடித்து வைத்துள்ள ஐசிங்கை ஒரு பாதிக்கு மட்டும் பரவலாக பூசி மறுபாதியால் முடியபின் துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம் .

Post a Comment

0 Comments