Healthy Chicken Soup Recipe - கோழி சூப்

 

காய்கறிகளும் மசாலாப் பொருட்களும் நிறைந்த  சுவையான கோழி சூப் ரெசிபி தமிழில்! ஆரோக்கியமான இந்த சிக்கன் சூப் ரெசிபியை இன்றே வீட்டில் முயற்சி செய்து சுவைத்து மகிழுங்கள்.

6 - 8 தம்ளர் சூப் 

தேவையான பொருட்கள் 

  • குஞ்சுக்கோழி - 1
  • வெங்காயம் - 250 கிராம் 
  • உள்ளி - 5 பல்லு 
  • மிளகு - 1 மே.க (நிரப்பி)
  • மல்லி - 1 மே .க (நிரப்பி)
  • வெந்தயம் - 1 மே.க (நிரப்பி)
  • நற்சீரகம் - 1 மே.க (நிரப்பி)
  • கறுவா - 3'' துண்டு ஒன்று 
  • மஞ்சள் - 1 துண்டு 
  • கராம்பு - 10
  • தேசிப்பழம் - 2
  • உப்பு - அளவிற்கு 
  • தண்ணீர் - 12 தம்ளர் ( போத்தல் )

செய்முறை 

  1. மிளகு , மல்லி , வெந்தயம் , நற்சீரகம் , கறுவா , மஞ்சள் , கராம்பு என்பவற்றை ஓரளவாக வறுத்து நன்றாக  இடித்தெடுத்துப் பொட்டலமாக கட்டி வைத்துக்கொள்க.

  2. வெங்காயம் , உள்ளி என்பவற்றைத் துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்க.

  3. கோழியின் எலும்போடு உள்ள தசைப் பகுதியை இயலுமானளவு வெட்டி நீக்கிவிட்டு எலும்பைச் சிறு சிறு துண்டுகளாக நொருக்கிக் கொள்க.

  4. பின்பு பானையில் 12 தம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவைத்துக் கொதித்த பின்பு வெட்டிய வெங்காயம் , உள்ளி , நொறுக்கிய எலும்பு என்பவற்றைப்போட்டு அவியவிடவும்.

  5. இவை அரைப்பதமாக அவிந்த பின்பு, கட்டிவைத்துள்ள பொட்டலம் அளவிற்கு உப்பு என்பவற்றையிட்டு மெல்லிய நெருப்பில் மூடி அவியவிட்டு நன்றாக அவிந்து நீர் அரைப்பங்காக வற்றி வரத் தொடங்கியதும் இறக்கி வடித்துத் தேசிப்பழச்சாறு கலந்து பரிமாறலாம்.     

Post a Comment

0 Comments