Carrot Cake Recipe - கரட் கேக்

சுவையான கேரட் கேக் செய்முறை தமிழில்! மாறுபட்ட ஓர் கேக் ரெசிபியை தேடுகின்றீர்களா? இதோ அதற்கான பதில்! இன்றே இந்த கேரட் கேக் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்யுங்கள்!

 40 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • மாஜரின் - 150கிராம் 
  • அரைத்த சீனி - 200கிராம் 
  • முட்டை மஞ்சள்கரு - 3 
  • கரட் - 250 கிராம் 
  • சிறிதாக வெட்டிய கஜீ - 125 கிராம் 
  • முட்டை வெண்கரு - 3 
  • சீனி - 75 கிராம் 
  • மா - 250 கிராம் 
  • பேக்கிங் பவுடர் - 2  தே. க (நிரப்பி)

செய்முறை 

  1. மாவுடன் பேக்கிங் பவுடர்  கலந்து 5 முறை அரிக்குக.

  2. கரட்டை தோல் நீக்கி துருவி வைக்குக.

  3. முட்டையை உடைத்து மஞ்சள்கரு வேறாகவும், வெண்கரு வேறாகவும் எடுத்து வைக்குக.

  4. மாஜரினை  பாத்திரத்திலிட்டு நன்கு அடித்துக் கொண்டபின் அரைத்த சீனியைக் கொஞ்சம் கொஞ்சமாக தூவி அடித்துக் கொள்க.

  5. அடித்த கலவையுள் முட்டை மஞ்சள்கருவை ஒவ்வொன்றாகவிட்டு நன்றாக அடித்து சிறிதாக வெட்டிய கஜீவையும் சேர்த்து அடித்துக் கொள்க.

  6. முட்டை வெண்கருவினுள் 75 கிராம் சீனியையிட்டு நுரை பொங்கும் வரை அடித்து, முன்பு அடித்த கலவையுள் சிறிது சிறிதாக ஊற்றி அடித்துக் கொண்ட பின், அரித்த மாவைச் சிறிது சிறிதாக தூவி முழுவதுமாகச் சேர்த்து, ஓயில்பேப்பர் பரவி மாஜரின் பூசிய தட்டிலூற்றி 350 பரணைட் வெப்பத்தில் 30 நிமிடம் பேக் செய்து கொள்க.

Post a Comment

0 Comments