Capsicum Kurma Recipe - குடைமிளகாய் குருமா

 

குடைமிளகாய் குருமா ரெசிபி தமிழில். கேப்சிகம் குர்மா அல்லது குடைமிளகாய் குருமா என்பது இந்திய ரொட்டிகள் மற்றும் சோற்றுடன் நன்றாகச் இணைய கூடிய ஒரு சுவையான உணவாகும்.

சுவையான குடைமிளகாய் குருமா 

தேவையான பொருட்கள் 

  • குடைமிளகாய் - 04
  • வெங்காயம் - 02
  • தக்காளி - 02
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  • தனியாத்தூள் - 1 தேக்கரண்டி 
  • மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி 
  • பட்டை - சிறிய துண்டு 
  • எண்ணெய் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. குடைமிளகாயை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு குடைமிளகாயை லேசாக வதக்கிக் கொள்ளவும்.

  2. வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டையை போடவும். பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.

  3. நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதங்கியவுடன் மிளகாய் தூள் , தனியாத்தூள் , மசாலாத்தூள் , உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் வதக்கிய குடைமிளகாயை போட்டு நன்கு கிளறி இறக்கவும். 

Post a Comment

0 Comments