Butter Cake Recipe - பட்டர் கேக்


மென்மையான பஞ்சுபோன்ற பட்டர் கேக் ரெசிபி தமிழில். வீட்டிலே செய்து அசத்தக்கூடிய எளிய பொருட்களால் செய்யக்கூடிய சுவையான ஒரு கேக் ரெசிபி.  

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு : 500 கிராம்
  • சீனி : 500 கிராம்
  • மாஜரின் : 500 கிராம்
  • முட்டை : 10
  • பேக்கிங் பவுடர் : 2 தே.க (நிரப்பி)
  • வனிலா : 1 மே.க
  • பனானா எசன்ஸ் : 3 துளிகள்
  • பிளம்ஸ் : 50 கிராம்
  • கஜீ : 50 கிராம்

செய்முறை

  1. சீனியை கிரைண்டரிலிட்டு அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. மாவுடன் பேக்கிங் பவுடரைக் கலந்து ஐந்து முறை அரித்து வைத்துக் கொள்க.
  3. மாஜரீனைப் பெரிய பாத்திரத்தில் போட்டுச் சீனியையும் சோத்து ஒரே பக்கமாகச் சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்க.
  4. முட்டைகளை வேறோர் பாத்திரத்தில் உடைத்து விட்டு வனிலாவும் சோத்து நன்கு நுரை பொங்கும் வண்ணம் முட்டையடி கருவியால் அடித்துக் கொள்க.
  5. பின்பு அடித்து வைத்துள்ள மாஜரின் கலவையில் முட்டையை அடித்து வரும் நுரையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு முழுவதுமாகச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்க.
  6. பின்பு அடித்து வைத்துள்ள கலவையில் கோதுமை மாவைச் சிறிது சிறிதாகத் தூவி ஒரே பக்கமாகச் சேர்த்துக் கலந்து பனானா எசன்ஸ்சையும் பிளம்சையும் சேர்த்துக் கொள்க.
  7. கேக் தட்டிற்கு ஓயில் பேப்பரைப் பரவிச் சிறிதளவு மாஜரின் பூசிக் கொண்டு கேக் கலவையை ஊற்றிப் பரவி பேக் செய்து கொள்க.

பைனப்பிள் கேக்
  • அன்னாசிப்பழங்கள் மிக மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டி ஒயில்ப் பேப்பர் பரவி மாஜரின் பூசிய கேக் தட்டில் பரவலாக அடுக்கிக் கொண்ட பின்பு மேற் கூறிய கேக் கலவையை அதன் மேலூற்றி பேக் செய்து பழங்கள் மேலிருக்கத் தக்கதாகத் திருப்பிப் போட்டுத் துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம் .

Post a Comment

0 Comments