Bread Upma Recipe - பாண் உப்புமா

 

பிரட் உப்மா ரெசிபி தமிழில்! பிரட் உப்மா என்பது பாண் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட சிற்றுண்டாகும். மீதமுள்ள பாண் துண்டுகளை கொண்டு சுவையான பிரட் உப்மா இன்றே தயாரியுங்கள்.

4 பேருக்கு போதுமான சுவையான பாண் உப்புமா 

தேவையான பொருட்கள் 

  • பாண் - 1 1/2 இறாத்தல்
  • முட்டை - 5
  • தக்காளிப்பழம் - 100கிராம் 
  • உருளைக்கிழங்கு - 250கிராம் 
  • கரட் - 100கிராம் 
  • லீக்ஸ் - 100கிராம் 
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 5 மே.க (நிரப்பி) /100கிராம் 
  • சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 4மே.க (நிரப்பி) / மிளகாய் 
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1மே .க (நிரப்பி)
  • கடுகு - 1தே.க (மட்டமாக)
  • சிறிதாக ஒடித்த சேமியா - 1மே.க (நிரப்பி)
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • மாஜரின் - 2 மே.க (நிரப்பி)/3மே.க தேங்கயெண்ணை 

செய்முறை 

  1. உருளைக்கிழங்கை அவித்து தோல் நீக்கிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.கரட், லீக்ஸ், என்பவற்றைத் துப்பரவாக்கிக் கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.

  2. பாணின் கருமை நிறமான மேற்பகுதியை வெட்டி அகற்றிவிட்டுப் பானை மிகச் சிறிய துண்டுகளாக பிய்த்தெடுத்துப் பாத்திரத்தில் போட்டு கால் தம்ளர் தண்ணீரை பாணிற்கு மேல் தெளித்துப் பானைக் கிளறிப் புரட்டிக் கால்மணி நேரம் வரை வைத்துக் கொள்க.

  3. முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் விட்டு அளவிற்கு உப்புத்தூள்,மிளகுத்தூள் என்பவற்றை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்க.

  4. தாக்களிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்க.

  5. தாச்சியில் எண்ணையை விட்டுக் கொதித்த பின்பு கடுகை போட்டு வெடிக்க வைத்து அதனுள் கரட்,லீக்ஸ் வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய், சேமியா, கறிவேப்பிலை என்பவற்றை இட்டு வதங்க விட்டு ஓரளவு வதங்கிய பின்பு வெட்டிய தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு என்பவற்றை இட்டு சேர்த்துப் பாண் துண்டுகளை கொட்டிச் சேர்த்து அதனுள் அடித்து வைத்துள்ள முட்டைப் பரவலாக ஊற்றி இடைவிடாது கிளறுக.

  6. பாணில் ஈரம் சுண்டித் துகள்களாக உதிரத்தொடங்கியதும் இறக்கி ஓரளவு சூட்டுடனேயே பரிமாறினால் சுவையாக இருக்கும்.


   

Post a Comment

0 Comments