Beetroot Wine Recipe - பீற்றூட் வைன்

ஒரு மாதத்திற்குள் தயாரிக்கக்கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் வைன் ரெசிபி தமிழில்! இலகுவாக வீட்டில் தயாரிக்க கூடிய வைன் ரெசிபி இதோ!

 4 - 4 1/2 போத்தல் வைன் 

தேவையான பொருட்கள் 

  • பீற்றூட் - 1 கிலோகிராம் 
  • சீனி - 1 கிலோகிராம் 
  • தண்ணீர் - 5 போத்தல் 
  • ஈஸ்ட் - 1 மே.க (நிரப்பி)
  • றஸ்க் - 1 சிறியது 
  • ஏலம் - 15
  • கராம்பு - 20 
  • சுடுநீர் - 4 மே.க 
  • சீனி - 4 மே.க 
  • பேரீச்சம்பழம் -1 கிலோகிராம் 
  • கறுவா - 50 கிராம் 
  • நெல் - 250 கிராம் 

செய்முறை 

  1. பீற்றூட்டைத் தோல்சீவி மிகச் சிறிய துண்டுகளாக வெட்டி இரண்டு முறை கழுவியெடுத்து பாத்திரத்தில் போட்டு 4 போத்தல் தண்ணீர் விட்டு அவியவைக்கவும். பீற்றூட் நன்கு அவிந்ததும் இறக்கி ஆற வைத்துக்கொள்க.

  2. தாச்சியில் 3 மே . க சீனியைப் போட்டு அடுப்பில் வைத்துச் சீனியை வறுத்துக் கொண்டிருக்கவும். சீனி முழுவதும் உருகிப் பாகு கறுக்கத் தொடங்கியதும் உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கிப் பாகைக் காய்ச்சி வைத்துள்ள பீற்றூட் பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலக்கி ஒரு கிலோ சீனியையும் இட்டுக் கரைத்து வைத்துக்கொள்க.

  3. பின்பு ஒரு மேசைக்கரண்டி ஈஸ்டைப் பாத்திரத்தில் போட்டு 1 மே .க சீனியும் நான்கு மேசைக்கரண்டி இளம் சூடான சுடுநீர் விட்டுக் கரைத்து அதனுள் றக்ஸ்டத் துண்டையும் இட்டு ஒரு மணிநேரம் மூடிவைத்துக்கொள்க.

  4. பின்பு அவித்து வைத்துள்ள பீற்றூட் கலவையை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி ஈஸ்ட் கலவையைக் கலந்து பேரிச்சம்பழம், ஏலம், நெல்,கராம்பு, கறுவா சேர்த்து ஒரு வாரத்திற்கு மூடி வைத்துக்கொண்ட பின்பு எடுத்து வடியின்மேல் ஒகன்ரி துணியை விரித்து வடித்தெடுத்துப் போத்தல்களில் அடைத்து ஈரலிப்பான நிலத்தில் ஒரு மாதம்வரை புதைத்து வைத்தெடுத்துப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.          

Post a Comment

0 Comments