Badam Kheer Recipe - பாதாம் கீர்

பாதம் கீர் ரெசிபி தமிழில் இதோ! இது ஓர் பாதாம் பருப்பால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பாகும்.  ருசியான பாதம் கீர் ரெஸிபியையை தமிழில் இங்கு பெற்றுக்கொள்ளுங்கள்.


 8 - 10 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • ரின் பால் - 1 ரின் (397 கிராம் )
  • பால் - 3 போத்தல் 
  • கஜூ - 100 கிராம் 
  • ஆல்மண்ட் / பைனப்பிள் எசன்ஸ் - 2 தே . க 
  • கலரிங் - விரும்பியது 

செய்முறை 

  1. பாலைக் காய்ச்சி (இரு முறை கொதித்தவுடன் ) இறக்கி ஆறவைக்கவும்.

  2. கஜூவைத் துப்பரவாக்கிக் கழுவி எடுத்துப் பாத்திரத்தில் போட்டு 1 தம்ளர் ஆறிய பாலைவிட்டு நான்கு மணிநேரம் வரை ஊறவைத்தெடுத்து மிக்சியில் பாலுடன் சேர்த்து விட்டு பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்க.

  3. பின்பு அரைத்த கலவையைப் பாத்திரத்தில் விட்டு ரின்பால் , மிகுதியாகவுள்ள பால் , எசன்ஸ் , கலரிங் என்பன கலந்து கலக்கிக் குளிரூட்டியில் இரண்டு மணிநேரம் வைத்தெடுத்துக் குளிர்பானம் பரிமாறும் குவளைகளில் நிரப்பிப் பரிமாறலாம்.  

Post a Comment

0 Comments