Arisi Maavu Koozh Recipe Tamil - அரிசிமாக் கூழ்


அரிசி மா கூழ் ஒரு சுவையான, ஆரோக்கியமான மற்றும் கோடைகாலத்திற்கேற்ற ஓர் கஞ்சி உணவாகும். செய்முறை தமிழில் இங்கே!

ஆரோக்கியம், பாரம்பரிய சுவைமிகுந்த அரிசிமா கூழ், இலகுவானமுறையில் வீட்டிலேயே செய்துகொள்ளமுடியும். 

6 பேருக்கு போதுமான ஸ்பெஷல் அரிசிமாக் கூழ் 

தேவையான பொருட்கள் 

  • அரிசி - 1 சுண்டு (நிரப்பி)
  • கற்கண்டு - 200 கிராம்  
  • வறுத்த பயறு - 100 கிராம் 
  • தேங்காய் - பாதி (இதைச் சிறு பல்லுப் போன்ற சொட்டுக்களாக வெட்டிக் கொள்க)
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • தண்ணீர் - 14 தம்ளர் 

செய்முறை 

  1. அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்து அரித்துக் கொள்க.

  2. ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பாலைப் பிழிந்து எடுத்து, இதில் 1/2 தம்ளர் முதல்பாலை எடுத்து வேறாக வைத்துக் கொள்க.

  3. பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பங்கு மாவையெடுத்துப் பாத்திரத்திலிட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து 1/2 தம்ளர் முதல்பாலைச் சிறிது சிறிதாக விட்டு இடியப்பமாப் பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெதுவாகத் தட்டி வைத்துக் கொள்க.

  4. பின்பு பானையில் 10 தம்ளர் தண்ணீரைவிட்டுக் கொதிக்கவைத்துக் கொதித்த பின்பு வறுத்த பயறைக் கழுவிப் போட்டு அவிய விடவும். பயறு முக்கால் பதமாக அவிந்து வரும் போது, உருட்டி வைத்துள்ள மா உருண்டைகளை ஒவ்வொன்று ஒவ்வொன்றாகப் போட்டு அவிய விடவும்.

  5. பின்பு மிகுதியாகவுள்ள மாவில் பாலை விட்டுக் கரைத்து வைத்துக் கொள்க.

  6. கொதிநீரில் போட்ட மா உருண்டைகள் அவிந்ததும், கற்க்கண்டையும் கரைத்து வைத்துள்ள மாக்கரைசலையும், சேர்த்துக் கரண்டியால் இடைவிடாது நன்கு துழாவிக் காய்ச்சவும். கலவை ஓரளவு தடிக்க தொடங்கியதும் உப்பும் தேங்காய்ச் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடனையே பரிமாறலாம். 

Post a Comment

0 Comments