Aloo Matar Recipe - ஆலு மட்டர்

 


ஆலு மட்டர்  இந்தியாவின் ஒரு பிரசித்திபெற்ற உணவாகும். ஆலு என்ற இந்தி சொல் உருளைக்கிழங்கு என்றும், மட்டர் என்றால் பச்சை பட்டாணி என்றும் பொருள். சுவையான மற்றும் காரசாரமான இந்த ரெசிபியை தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

சுவையான ஆலு மட்டர் 

தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு - 500 கிராம் 
  • பட்டாணி - 1 கப் 
  • வெங்காயம் - 6
  • தக்காளி - 250 கிராம் 
  • இஞ்சி, வெ.பூண்டு விழுது - 2 தே. க 
  • மல்லித் தூள் - 1 மே. க 
  • மஞ்சள் தூள் - 1 தே. க 
  • மசாலாத்தூள் - 1 தே.க
  • மிளகாய்த் தூள் - 1 1/2 தே.க 
  • சீரகம் - தேவையான அளவு 
  • மல்லித்தழை - தேவையான அளவு 
  • நெய் - 2 மே.க 
  • எண்ணெய் - 2 மே.க 

செய்முறை 

  1. வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

  2. பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. உருளைக்கிழங்குகளை பெரிய துண்டுகளாக  வெட்டி வேக வைத்து எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும்.

  4. வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும.

  5.  வெங்காய விழுது வதங்கியதும் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

  6. அதன் பிறகு மல்லித்தூள் , மிளகாய்த்தூள் , மஞ்சள்த்தூள் , மசாலாத்தூள் சேர்த்து எண்ணெய்  பிரியும் வரை வதக்கவும். அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,  பட் டாணி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

  7. கலவை கொதித்து கெட்டியான பதம் வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.

  8. சுவையான அலுமட்டர் ரெடி. இது சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.         



Post a Comment

0 Comments