Vegetable Rice Recipe - மரக்கறிச் சாதம்

 


வெஜ் ரைஸ் செய்முறை தமிழில். வீட்டிலேயே எளிதாக கிடைக்க கூடிய மசாலா, அரிசி மற்றும் கலவை காய்கறிகளுடன் தயாரிக்கப்படும் ஒரு சுவையான சைவ உணவாகும்..

6 பேருக்கு போதுமான மரக்கறிச் சாதம் தயார்...

தேவையான பொருட்கள் 

  • பச்சையருசி - 1000 கிராம் 
  • பூசணிக்காய் - 500 கிராம் 
  • கத்தரிக்காய் - 250 கிராம் 
  • பயிற்றங்காய் - 250 கிராம் 
  • தக்காளிப்பழம் - 250 கிராம்
  • மரவள்ளிக்கிழக்கு - 500 கிராம் 
  • கோவா /கீரை - 500 கிராம் 
  • வாழைக்காய் - 2 
  • வெங்காயம் - 250 கிராம் 
  • பச்சைமிளகாய் - 250 கிராம் 
  • தேங்காய் - 2 
  • தேசிப்பழம் - 2
  • உப்பு - அளவிற்கு 

செய்முறை 

  1. வெங்காயம், மிளகாய், தக்காளிப்பழம் என்பவற்றைக் கழுவித் துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.
  2. மரக்கறி வகைகளைத் தோல் சிவித் துப்பரவாக்கிக் கழுவி ஓரளவான துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்க.
  3. தேங்காயைத் துருவித் தண்ணீரை சிறிது சிறிதாக வெட்டு 5-6 தம்ளர் வரையான பாலைப் பிழிந்து எடுத்துக் கொள்க.
  4. பின்பு பானையில் (இரண்டு கொத்து அரிசி அவியும் பானையில்) முக்கால் வாசிக்குத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்த பின்பு, வெட்டி வைத்துள்ள மரக்கறி வகைகளை மட்டும் போட்டு அவியவிடவும். மரக்கறி வகைகள் அரைப்பதம் அவிந்தவுடன், அரிசியைக் கழுவிப்போட்டு அவிய விடவும். அரிசி அரைப்பதம் அவிந்தவுடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம், மிளகாய், தக்காளிப்பழம் என்பவற்றையுமிட்டு  அவிய விடவும்.
  5. அரிசி நன்றாக அவிந்தவுடன் பால், உப்பு என்பவற்றையிட்டு அடிப்பிடிக்கா வண்ணம் நன்கு துளாவிக் காய்ச்சி இறுகத் தொடங்கியதும் இறக்கித் தேசிப்பழச்சாறு கலந்து பரிமாறலாம்.

குறிப்பு   

         விரும்பினால் 2 மே. க (நிரப்பி) கறித்தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments