Ravai Upmaa - Tamil Recipe - சுவையான ரவை உப்புமா

ரவா உப்புமா செய்முறை தமிழில். வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து  சுவையான உப்புமா தயாரிப்பதற்கான முழு செய்முறையையும் தமிழில் பெறுங்கள்.

2 3 பேருக்குப் போதுமானது

தேவையான பொருட்கள் 

  • ரவ்வை : 250 கிராம்
  • உருளைக்கிழங்கு : 250 கிராம் 
  • லீற்ஸ் : 100 கிராம்
  • கரட் : 100 கிராம்
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை : 1 மே.க. (நிரப்பி)
  • மாஜரின் அல்லது நல்லெண்ணை : 3 மே . க . 
  • மிளகுதூள் : அளவிற்கு
  • உப்புத்தூள் : அளவிற்கு
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் : 3 தே . க . ( நிரப்பி )
  • செத்தல் மிளகாய் பச்சை மிளகாய் : 10 
  • கொதிநீர் அல்லது ஒரு பாதித் தேங்காயில் பிழிந்த பால்  : 1 -1/2 தம்ளர்

செய்முறை 

  1. ரவ்வையைத் துப்பரவாக்கி ஓரளவாக வறுத்தெடுத்துக் கொள்க
  2. உருளைக்கிழங்கைத் தோல் சீவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கழுவி வைத்துக் கொள்க.
  3. லீக்ஸ், கரட் என்பவற்றைத் துப்பரவாக்கிச் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கழுவி வைத்துக் கொள்க.
  4. மிளகாயைக் கழுவிச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.
  5. தாச்சியை அடுயில் வைத்து, மாஜரினையிட்டு உருகவைத்து வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கரட் லீக்ஸ் என்பவற்றைப் போட்டு மூடிச் சிறிதுநேரம் வதங்கவிட்ட பின், அதனுள் வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் என்பவற்றையும் போட்டு, உப்புத்தூள், மிளகுதூள் என்பனவும் சோத்து மூடி வதங்கவிடவும். 
  6. உருளைக்கிழங்கு நன்கு அவிந்தபின், இதனுள் வறுத்து வைத்துள்ள ரவ்வையைக் கொட்டிக் கிளறிக் கொதிநீர் அல்லது தேங்காய்ப்பால் 1 தம்ளர் விட்டுக் கரண்டியால் நன்கு சேர்த்துக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி வேறோர் பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும். இப்போது சுவையான உப்புமா தயார்.

குறிப்பு 
  1.  உப்புமாவைப் பரிமாறும் போது விரும்பினால் 2 முட்டைகளை அவித்துச் சிறிய துண்டுகளாக வெட்டிச் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது 20-25 வரை பொறித்த இறால்களைச் சேர்த்துக் கொள்ளலாம். 
  2. அல்லது மரக்கறி வகைகள் வதங்கி வரும்போது இரண்டு முட்டைகளை கொட்டிக் கிளறிக் கொள்ளவும். அடித்து ஊற்றி நன்கு கிளறிச் சேர்த்துக் கொண்ட பின்பு ரவவையைக் கொட்டிக் கிளறிக்கொள்ளவும்.

Post a Comment

0 Comments