Refreshing Sarbath Recipe - சர்பத்

 

மிகவும் குறைந்த அளவியிலான பொருட்களை பயன்படுத்தி சர்பத் தயாரிப்பது எப்படி? ரெசிபி தமிழில் இதோ! நேர்த்தியான சுவையுடன் கூடிய தாகத்தைத் தணிக்கும் ஓர் பானத்தை இன்றே தயாரியுங்கள்!

60 - 80 பேருக்கு போதுமானது .

80 சிறிய தம்ளர் 

60 பெரிய தம்ளர் 

தேவையான பொருட்கள் 

  • வினோ எமூல்சன் - 1 அவுன்ஸ் போத்தல் 
  • சீனி - 3 கி.கிராம் 
  • ஐஸ் தண்ணீர் - 20 போத்தல் 
  • ரின் பால் - 2 (525 கிராம்) ரின் 
  • கசகசா - 25 கிராம் 
  • ஐஸ்கட்டி - 2 கி.கிராம் (சிறிய துண்டுகள்)
  • சிறிய வெட்டிய அன்னாசிப் பழத்துண்டுகள் - 6 மே.க 
  • சிறிதாக வெட்டிய ஜெலி துண்டுகள் - 30 கிராம் ஜெலற்றினில் தயாரிக்குக.(ஜெலி தயாரிக்கும் முறையைப் பார்க்குக்கு)

செய்முறை 

  1. கசகசாவைத் துப்பரவு செய்து கழுவிக்களைந்து, பாத்திரத்தில்லிட்டு தண்ணீர் விட்டு ஒரு மணிநேரம் ஊறவைத்துக் கொள்க.

  2. பின்பு பெரிய பாத்திரமொன்றில் சீனியைப் போட்டு, ரின் பால் விட்டு நன்கு கரைத்துக்கொண்ட பின்பு, வினோ எமூல்சன், தண்ணீர் என்பன விட்டுக் கரைத்துக் குளிர்பானம் பரிமாறும் குவளைகளில் நிரப்பி, இரண்டு ஐஸ்கட்டித் துண்டுகள் 1/2தே .க ஊறிய கசகசா, 1 மே.க அன்னாசிப் பழத்துண்டுகள், 1 மே.க ஜெலித்துண்டுகள் என்பன கலந்து பரிமாறலாம்.        

Post a Comment

0 Comments