Instant Puli Sadam Recipe - புளிச்சாதம்

 

புளி சாதாம் வீட்டில் செய்வது எப்படி? புளி சாதம் ரெசிபி! தமிழில்! படிப்படியான வழிமுறைகளுடன் சுவையானா புளி சாதா செய்முறை இதோ!.

2 பேருக்கு போதுமான புளிச்சாதம் 

தேவையான பொருட்கள் 

  • சம்ப அரிசி / பச்சயரிசி - 1 சுண்டு (தலைதட்டி)
  • கடலைப்பருப்பு - 50கிராம் 
  • விதை நீக்கிய புளி - 25 கிராம் /பாக்களவு
  • செத்தல் மிளகாய் (சிறிதாக வெட்டியது) - 5 
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே .க (நிரப்பி )
  • சிறிதாக வெட்டிய உருளைக்கிழக்கு - 250 கிராம் 
  • மாஜரின் / நெய் - 2 மே .க (மட்டமாக)
  • தேங்காய் எண்ணெய் - 1/8 போத்தல் 
  • மஞ்சள்த்தூள் - 1 தே .க (மட்டமாக)
  • மிளகுதூள் - 1 தே .க (மட்டமாக)
  • கடுகு-1 சிட்டிகை 
  • பெருஞ்சீரகம் - 1 சிட்டிகை    
  • வெட்டிய கறிவேப்பிலை - 1 மே.க
  • உப்பு - அளவிற்கு 
  • தண்ணீர் - 1/2 தம்ளர் 

செய்முறை 

  1. கடலைப்பருப்பைத் துப்பரவாக்கி கழுவி மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பானையில் நீரை கொதிக்கவைத்து, அரிசியும், கடலைப்பருப்பையும் கழுவிப்போட்டு அவிய விடவும். அவிந்ததும் கஞ்சியை வடித்தெடுத்துவிட்டு மீண்டும் அடுப்பில் சொற்ப நேரம் வைத்து ஈரப்பதன் முற்றாக நீங்கியதும் இறக்கி கொட்டி பரவி ஆறவிடவும்.
  3. சிறிதாக வெட்டிய உருளைக்கிழங்கிற்கு உப்புத்தூள் புரட்டி தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
  4. பின்பு தாச்சியில் மாஜரின் அல்லது நெய்யை காயவைத்து அதனுள் கடுகைப் போட்டு வெடிக்க வைத்து, வெட்டிய வெங்காயம், சிறிதாக வெட்டிய செத்தல் மிளகாய் என்பவற்றை போட்டு வதங்க விட்ட பின் நற்சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகுததூள், என்பவற்றையும் போட்டு வதங்கவிட்டு அதனுள் அரைத் தம்ளர் தண்ணீரில் கரைத்த புளிக்கரைசலையும் விட்டு கொதிக்க விட்ட பின் அளவிற்கு உப்பும் சேர்த்துக் கொள்ளலாம்.
  5. கொதித்து கொண்டிருக்கும் கலவையில், ஆறவைத்திருக்கும் சோற்றையும், பொரித்த உருளைக்கிழகையும் கொட்டி நன்றாகக் கிளறி ஈரம் சுண்டத் தொடக்கியதும் இறக்கி அறவைத்த பின்பு இதைக் கட்டுச்சாதமாகக் கட்டிச் சென்று பயன்படுத்தலாம்.       

Post a Comment

0 Comments