Special Prawn Biriyani Recipe - ஸ்பெசல் இறால் புரியாணி


சுவையான இறால் பிரியாணி செய்முறை தமிழில். இறால் பிரியாணியிற்கு தேவையான  பொருட்கள் மற்றும் சமையல் செய்முறை தமிழில். இச்சுவையான பிரியாணியை இன்றே  முயற்சி செய்யுங்கள்.

4 பேருக்கு போதுமான சுவையான புரியாணி  

தேவையான பொருட்கள்              

  • சம்பா அரிசி - 500 கிராம்                   
  • கரட் - 125 கிராம் 
  • லீக்ஸ் - 125 கிராம் 
  • உருளைக்கிழங்கு - 125 கிராம் 
  • போஞ்சி - 125 கிராம் 
  • கோவா - 125 கிராம் 
  • தக்காளிப்பழம் - 125 கிராம் 
  • கஜீ  - 50 கிராம் 
  • பிளம்ஸ் - 50 கிராம் 
  • மாஜரின் - 50 கிராம் 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • பச்சை பட்டாணிக்   கடலை  - 100 கிராம் 
  • இறால் - 500 கிராம் 
  • சிலி சோஸ் - 1 மே .க 
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை  - 1 மே .க(நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2  மே .க(நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய்  - 1 மே.க(நிரப்பி)
  • கறுவா(2" நீளம்)  - 10 துண்டுகள் 
  • ஏலம் - 10
  • கராம்பு - 10
  • மிளகு - 10
  • உள்ளி - 3பல்லு 
  • மங்சள்த்தூள் - 2 சிட்டிகை 
  • தேசிப்புளி - 1 மேசைக்கரண்டி 
  • தேங்காய் எண்ணெய் - 4 போத்தல்

செய்முறை 

  1. இறாலை துப்பறவு செய்து உப்புத்தூள், சில்லி சோஸ் புரட்டி பொறித்து எடுக்குக. 
  2. முதலில் கறுவா,ஏலம்,கராம்பு,உள்ளி,மிளகு என்பவற்றை இடித்து ஒரு மெல்லிய துணியில் போட்டலமாக கட்டிவைக்குக. 
  3. கடலையை துப்பரவாக்கி 3 மணி நேரம்வரை ஊற வைக்குக. 
  4. பின்பு பானையில் நீரை கொதிக்க வைத்து அரிசியை கழுவிப்போட்டு,கடலையும் இட்டு அதனுடன் பொட்டலத்தையும் மஞ்சள்த்தூளையும் போட்டு அவியவிட்டு அரிசி அவிந்ததும், பொட்டலத்தை எடுத்து வடித்து இறக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி தேசிப்புளியும் விட்டுக் கிளறி ஆறவிடவும்.(தண்ணீர் அளவாக வைத்து புழுங்க வைத்துக் கொள்ளலாம்.)
  5. கரட்,போஞ்சி,லீக்ஸ்,உருளைக்கிழங்கு என்பவற்றை சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்க.
  6. கோவையையும் தாக்களிப்பழத்தையும் தனித்தனியாக  சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்க.
  7. கஜீ வை பாதித்துண்டுகளாக பிரித்துக்கொள்க.
  8. பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து மாஜரினை இட்டு உருகவிட்ட பின் கஜீ ,பிளம்ஸ் என்பவற்றை தனித்தனியாக போட்டு பொறித்து எடுக்கவும்.
  9. தாச்சியில் மிகுதியாக உள்ள மாஜரினில் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய்,கறிவேப்பிலை என்பவற்றை போட்டு வதங்கவிட்ட பின் அதனுள் மரக்கறிகளையும் போட்டு மூடி வதங்க விட்டு முக்கால் பதமாக வதங்கிய பின் வெட்டி வைத்துள்ள கோவா,தக்காளிப்பழம்,கடலை,மிளகுத்தூள்,உப்புத்தூள் என்பவற்றையும் இட்டு மூடி வதங்கவிட்டு இறக்கிக்கொள்க. 
  10. பின்பு ஆறவைத்துள்ள சோற்றினுள் வதங்கிய மரக்கறிவகைகள், பொரித்த இறால்,பொறித்த கஜீ  ,பிளம்ஸ் என்பவற்றையிட்டு நன்கு சேர்த்துக்கொள்க.              

    குறிப்பு:

மரக்கறி வகைகளை எண்ணையில் வதங்க வைப்பதற்கு பதிலாக நீராவியில்  அவித்தெடுத்தது சிறிய நேரம் வெங்காயத்துடன் சேர்த்து வாதங்கவிட்டும் பயன்படுத்தலாம்.   


Post a Comment

0 Comments