Prawn Rice Recipe - பெஷஸ்ல் இறால் சாதம்



இறால் ரைஸ் செய்வது எப்படி? படிமுறைகள் தமிழில் இதோ! சுவையான இறால் சாதத்தை வீட்டில் எளிமையாக சமைத்து சுவைத்து மகிழுங்கள்.

3 பேருக்கு தேவையான சுவையான ஸ்பெஷல் பிறவுண் றைஸ்

தேவையான பொருட்கள் 

  • சம்பா அரிசி - 1 சுண்டு 
  • தேங்காய் - பாதி 
  • மாஜிரீன் - 100 கிராம் 
  • வெங்காயம் - 100 கிராம்
  • இறால் - 500கிராம் 
  • தேங்காய்ச் சொட்டு - 5 மே .க (நிரப்பி)
     பல்லுப் போல் வெட்டியது   
  • கஜீ - 100கிராம் 
  • பிளம்ஸ் - 50கிராம் 
  • கறுவா - 4துண்டு 
  • கராம்பு - 10
  • ஏலம் - 10
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • மிளகுத்தூள் - அளவிற்கு

செய்முறை 

  1. பாதித் தேங்காயைத் துருவி 2 தம்ளர் தண்ணீர் விட்டு பாலைப் பிழிந்தெடுக்குக.
  2. தாச்சியில் மாஜரீனையிட்டு கொதித்த பின் கஜீ ,பிளம்ஸ் என்பவற்றையிட்டுப் பொரித்தெடுக்குக.
  3. பின்பு கறுவா ,ஏலம், என்பவற்றையிட்டுப் பொறித்தெடுத்துக் கொள்க.
  4. மிகுதி மாஜரீனுள் இறாலையிட்டு அரைப்பதமாக பொரிந்தபின், வெங்காயம், தேங்காய்ச்சொட்டு என்பன இட்டு வதக்கி மிளகுத்தூள், உப்புத்தூள், சேர்த்துக் கொண்டபின் சம்பா அரிசியைக் கழுவிப்போட்டு, 2 தம்ளர் பாலைவிட்டு அளவிற்குத் தண்ணீரும் விட்டு, பொரிந்த கஜீ, பிளம்ஸ், கறுவா, ஏலம், கராம்பு இட்டு நீர் வற்றும்வரை அவியவிட்டு இறக்கிப் பாத்திரத்தில் கொட்டிப் பரவி ஆறவிட்டுக் கொள்க.    

Post a Comment

0 Comments