Poori Recipe - உப்பலான பூரி செய்வது எப்படி?


உப்பலான பூரி செய்முறை தமிழில். வீட்டிலேயே கிரிஸ்பியான பூரி தயாரிக்க இந்த படிப்படியான செய்முறைகளை பின்பற்றவும். கறி, சட்னி அல்லது குர்மாவுடன்  அசத்தலாக பொருந்தும் பூரியை எளிதாக தயாரியுங்கள்.

 20 - 30 பூரிகள்

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு : 12 சுண்டு
  • ஆட்டா மாவு : 1 சுண்டு (நிரப்பி)
  • மாஜரின் : 1 மே. க. (நிரப்பி)
  • உப்புநீர் : அளவிற்கு
  • அப்பச்சோடா : 1 தே. க. (மட்டமாக)
  • ஐஸ் தண்ணீர் : அளவிற்கு
  • கோதுமை மாவு : 2 மே. க. (நிரப்பி) பலகைக்குப் பூசுவதற்கு
  • தேங்காய் எண்ணெய் : 4 போத்தல்

செய்முறை


  1. கோதுமை மாவு, ஆட்டா மாவுடன் அப்பச் சோடாவைக் கலந்து இரண்டுமுறை அரித்துப் பாத்திரத்தில் போட்டுக்கொண்டு, அளவிற்கு உப்பு நீரும் மாஜரினுமிட்டுப் பிசிறிச் சேர்த்துக் கொள்க.
  2. பின்பு மாவினில் அளவிற்கு ஐஸ் தண்ணீர் விட்டுக் கையிலொட்டாத பதத்திற்கு நன்றாகப் பிசைந்து குழைத்து நான்குமணி நேரத்திற்கு வைத்துக்கொள்க.
  3. மாக்கலவையை ஓரளவான உருண்டைகளாக எடுத்து மாப்பூசிய பலகையில் வைத்து உருளையால் 1/4" தடிப்பாக இருக்கும் வண்ணம் உருட்டி, சுட்டுவிரலளவு விட்டமுள்ள வட்டங்களாக வரும்வண்ணம் வெட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துக் கொள்க. இப் பூரிகளை உருளைக்கிழங்கு மசாலாக் கறியுடன் பரிமாறலாம்.

குறிப்பு

  1. சப்பாத்தி இற்கும் பூரிக்கு மாக்குழைப்பது போலக் குழைத்து வட்டங்களாக வெட்டியெடுத்துக் கொள்க. பின்பு துவாரமுள்ள மண்சட்டியை எடுத்து அத்துவாரத்தின் மேல் கம்பிவலையை வைத்து அதன்மேல் சென்னிறமாகளிந்து கொண்டிருக்கும் தணலைக் கொட்டி அத் தணலின்மேல் வட்டமாக வெட்டித் தோசைக்கல்லில் இரு புறமும் ஓரளவாக வாட்டியெடுத்த சப்பாத்திகளைப் போட்டு அவை பொங்கிக் கொண்ட பின்பு எடுத்துக் கொள்ளலாம்
  2. தணல் உள்ள சட்டியை எரியாத அடுப்பொன்றில் தூக்கி வைத்துக் கொண்டால் தணல் நீண்ட நேரத்திற்கு கதகதப்பாக இருக்கும்.
  3. ஆட்டா மாவிற்குப் பதிலாகக் கோதுமை மாவை முழுமையாகப்பாவிக்கலாம்.

Post a Comment

0 Comments