Fresh Orange Juice Recipe - ஒரேஞ் யூஸ்


மிக சில பொருட்களுடன் கூடிய எளிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஆரஞ்சு ஜூஸ் செய்வது எப்படி? ரெசிபி தமிழில். ஆரோக்கியமான மற்றும் சுவையான ஆரஞ்சு ஜூஸ் ரெசிபி!

 இரண்டு போத்தல் யூஸ் 

தேவையான பொருட்கள் 

  • தேசிச்சாறு அல்லது தோடம்பழச்சாறு - 1 1/2 தம்ளர் 
  • சீனி - 1500 கிராம் 
  • தண்ணீர் - 3 தம்ளர் 
  • மங்சள் கலரிங் - 3 தே.க (மட்டாக)
  • லெமன் எசன்ஸ் - 1 தே.க (மட்டாக)

செய்முறை 

  1. தேசி அல்லது தோடம்பழத்தில் சாறு பிழிந்து ஒகன்ரித் துணியில் விட்டு வடித்தெடுத்து ஓர் போத்தலில் ஊற்றி 6 மணிநேரம் அடைய வைத்து எடுத்து சாறை தெளித்தெடுத்துக் கொள்க.

  2. தாச்சியில் சீனியையிட்டு மூன்று தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.பாகு காய்ச்சும்போது முதலில் சீனி முழுவதும் கரைந்து பாகு நன்கு பொங்கிக் கொதித்து ஓரளவாகத் தடிக்கத் தொடங்கியதும் உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்க.

  3. கலவை ஓரளவாக ஆறியதும் 1 1/2 தம்ளர் பழச்சாறு, கலரிங், லெமன் எசன்ஸ் என்பன சேர்த்து நன்கு கலக்கி தொற்று நீக்கிய போத்தலில் அடைத்து வைத்து நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தலாம்.    

Post a Comment

0 Comments