Spicy Odiyal Kool Recipe Tamil - ஓடியல்மாக் கூழ்


ஒடியல் கூழ் இலங்கையின் குறிப்பாக தமிழர்களிடையே மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். முழுமையான ரெசிபி தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.இது ஒருவித காரமான கடல் உணவு சூப் வகையான உணவாகும்.

 8 பேருக்கு போதுமான சுவையான ஓடியல்மாக் கூழ் 

தேவையான பொருட்கள் 

  • ஓடியல்மா - 1 சுண்டு (நிரப்பி)
  • பயிற்றங்காய் - 100 கிராம் 
  • மரவள்ளிக்கிழங்கு - 100 கிராம் 
  • கத்தரிக்காய் - 100 கிராம் 
  • பாலக்கொட்டை - 200 கிராம் 
  • கடலை - 100 கிராம் 
  • வாழைக்காய் - 1(பெரியது)
  • செத்தல் மிளகாய் - 20
  • மிளகு - 1தே.க (நிரப்பி)
  • மஞ்சள் - 1 துண்டு (2'' நீளம் )
  • உள்ளி - 5 பெரியபல்லு 
  • பழப்புளி - பாக்களவு 
  • புழுங்கலருசி - 1 பிடி 
  • முள்ளில்லாத மீன்வகை - 500 கிராம்                                                                                           (இறால் , நெத்தலி)
  • நண்டு - 2
  • பாரைமீன் தலை - 1
  • சிறிய மீன் கருவாடு - 50 கிராம் 
  • முசுட்டையிலை - 10
  • பல்லுப்போல் வெட்டப்பட் ட  தேங்காய்ச் சொட்டு - 1/2 சுண்டு 
  • உப்பு - அளவிற்கு 

  • செய்முறை 

  1. கடலையைக் கழுவி மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. செத்தல் மிளகாய், மிளகு, உள்ளி, மஞ்சள்  என்பவற்றிற்கு ஓரளவு நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்துக் கொள்ளவும்.

  3. மீன்வகைகள், கருவாடு, நண்டு என்பவற்றைத் துப்பரவு செய்து கழுவி வைத்துக் கொள்க.

  4. மரவள்ளிக்கிழங்கு, பயிற்றங்காய், கத்தரிக்காய், வாழைக்காய், பலாக்கொட்டை என்பவற்றை துப்பரவாக்கிச் சிறு துண்டுகளாக வெட்டிக் கழுவி  வைத்துக் கொள்க.

  5. பாத்திரத்தில் பழப்புளியையிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்க.

  6. ஒடியல் மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு, அளவிற்கு நீர் சேர்த்துக் கூழ்ப்பதமாகக் கரைத்து அரைமணி நேரம் ஊற வைத்தபின் எடுத்து ஒரு துணியில் இட்டுப் பிழிந்தெடுத்துப் பிறிதொரு பாத்திரத்தில் போட்டு, அரைத்த கூட்டையும் சேர்த்துக் கரைத்து வைத்துள்ள 1 தம்ளர் பழப்புளியையும் விட்டு, அளவிற்குத் தண்ணீரும் விட்டு நீர்ப்பதமாகக் கரைத்து வைக்குக.

  7. சோஸ்பானில் (ஒரு கொத்து அரிசி அவியக்கூடிய பாத்திரம்) அதன் அரைவாசிக்குத் தண்ணீரை வீட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்தபின் கழுவி வைத்துள்ள மரக்கறிவகை, முசூட்டையிலை, கழுவிய அரிசி, கடலை என்பவற்றை இட்டு அவியவிடவும். இவை முக்கால்ப் பதமாக அவிந்த பின்பு மீன் வகைகள், கருவாடு என்பவற்றையும் போட்டு அவிய விடவும்.

  8. மரக்கறிவகை நன்றாக அவிந்ததும், ஒடியல் மாக் கரைசலையூற்றி  நன்றாகக் கரண்டியால் கலக்கி அளவிற்கு உப்பும் சேர்த்து தேங்காய்ச் சொட்டும் கலந்து இறக்கிச் சூட்டுடன் பரிமாறலாம்.           


Post a Comment

0 Comments