Chicken Rice Recipe - கோழிச்சாதம்


விரைவான மற்றும் எளிதான சிக்கன் ரைஸ் செய்முறை தமிழில். இது போன்ற மேலும் சுவையான ரைஸ் ரெசிபிகளைக் இங்கே தமிழில் பெற்று கொள்ளுங்கள்.

5 பேருக்கு போதுமான சுவையான கோழிச்சாதம் தயார் 

தேவையான பொருட்கள் 

  • பச்சையருசி - 500கிராம் 
  • கோழி இறைச்சி / சுறா மீன் - 500கிராம் (எலும்பு நீக்கியது)
  • தேங்காய் - 2 
  • கறித்தூள் - 1 மே  .க (நிரப்பி)
  • சின்னவெங்காயம் - 250 கிராம் 
  • இறைசித்தூள் - 1 தே .க (மட்டமாக)
  • தேசிப்பழம் - 2
  • உப்பு - அளவிற்கு 

செய்முறை :

  1. கோழி இறைச்சியை எலும்பு நீக்கி அரைக்கிலோ தசையை மட்டும் எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்க.
  2. வெங்காயத்தை துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்க.
  3. தேங்காயை துருவி அளவிற்குத் தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு 4 தம்ளர் முதலாம் இரண்டாம் பால்களை எடுத்துக் கொள்க. மிகுதித் தேங்காய்ப் பூவினில்  2 போத்தல் தண்ணீர் விட்டுப் பாலைப் பிழிந்தெடுத்துப் பானையில் விட்டுக் கொதிக்க வைக்கவும்.பால் கொதித்தவுடன் அரிசி, இறைச்சி, வெங்காயம் என்பவற்றைப் போட்டு அவிய விடவும். அரிசி முக்கால் பதமாக அவிந்த பின்பு தூளையிட்டு கரண்டியால் நன்றாக சேர்த்துச் சிறிது நேரம் முடி அவிய விடவும்.
  4. சாதம் ஓரளவு இறுகத் தொடக்கும்போது 4 தம்ளர் பாலையும், இறைச்சித் தூளையுமிட்டுச் சேர்த்து அடிப்பிடிக்காமல் நன்கு துளாவிக் காய்ச்சி இறுகியதும் இறக்கித் தேசிப்புளி விட்டு நன்கு துளாவிச் சேர்த்துச் சிறிது நேரம் மூடிவைத்தெடுத்து சூட்டுடனேயே பரிமாறலாம்.

குறிப்பு   

**இறைச்சிக்கு பதிலாக சுறா மீன் போட்டும் காய்ச்சலாம். ஆனால்             அரிசியைப் போட்டு அரைப்பதமாக அரிசி அவிந்த பின்பே மீனைத்       துண்டுகளாக வெட்டிக் கழுவிப் போடுதல் வேண்டும். 


Post a Comment

0 Comments