Spicy Prawn Fry Noodles Recipe - பிறை இறால் நூடில்ஸ்

ஃப்ரை இறால் நூடுல்ஸை எளிமையாக மற்றும் சுலபமாக தயாரிப்பதற்கான ரெசிபி தமிழில். சுவையான இறால் மற்றும் மரக்கறி கலவைகளால் செய்ய கூடிய இவ் நூடில்ஸ் ரெசிபியை இன்றே வீட்டில் செய்யுங்கள்.

சுவையான பிறை நூடில்ஸ் 

 தேவையான பொருட்கள் 

  • நூடில்ஸ் -1பைக்கற் 
  • இறால் -500 கிராம்(துப்பரவு செய்தது)
  • உள்ளி -4 பல்லு 
  • சீனி -1 மே.க 
  • உப்பு -1 தே.க 
  • பழப்புளி கரைசல் -2 மே.க 
  • சிலி பேஸ்ட் -1 மே.க
  • கோவா -100 கிராம்  
  • கரட் -100 கிராம் 
  • லீக்ஸ் -100 கிராம்
  •  பச்சைமிளகாய்  -3
  • முட்டை -2
  • சோயா சோஸ் -3 மே.க 
  • தக்காளிப்பழம் -1
  • தேங்காயென்ணை -1/2 போத்தல் 
  • சிக்கின் கியூப் -1 கட்டி 
  • சிலி சோஸ் -1 மே.க 
  • மிளகுத்தூள் -2 சிட்டிகை 

செய்முறை 

  1. கோவா, கரட், லீக்ஸ், பச்சைமிளகாய், தக்காளிப்பழம், என்பவற்றைத் துப்பரவு செய்து சிறு துண்டுகளாக வெட்டி அல்லது துருவி எடுத்துக் கொள்க.

  2. நூடில்சில் ஒரு பிடியை எடுத்து நன்கு கொதித்த நீரிலிட்டு 2 நிமிடம் மூடிவைத்து வடித்தெடுத்துக் கொள்க.

  3. முட்டையை அடித்து அளவாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வைத்துக்கொள்க. 

  4. இறாலைத் துப்பரவு செய்து சில்லிசோஸ் இட்டு புரட்டி வைத்துக்கொள்க.

  5. மிகுதி நூடில்ஸைத் தண்ணீரில் 5 நிமிடம் ஊற விட் டெடுத்து நன்கு பொங்கிக் கொதித்த எண்ணெயிட்டு மெல்லிய பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்க.

  6. தாச்சியில் 5 மே.க எண்ணெய்விட்டு கொதித்த பின்பு இறாலை இட்டுப் பொரிக்குக. இறால் பொரிந்ததும் சிறிதாக வெட்டிய உள்ளி, சீனி. உப்பு, பழப்புளி கரைசல் என்பவற்றை அதனுள் இட்டு நன்கு சேர்த்துக் கொண்ட பின்பு வெட்டிவைத்துள்ள மரக்கறி வகைகள் யாவற்றையும் அதனுள் கொட்டி நன்கு கிளறி சிறிது நேரம் மூடி அவிய விடவும்.

  7. பின்பு இதனுள், சோயா சோஸ், 2 மே.க வெந்நீரில் கரைத்த சிக்கின் கியூப் கரைசல் என்பன விட்டு சேர்ந்தபின் மரக்கறி வகைகளை தாச்சியின் கரைப்புறமாக வட்டமாகத் தள்ளி நடுவே ஓர் பள்ளம் அமைத்துக் கொண்டபின் அடித்த முட்டையை  நடுவே ஊற்றி சிறிது நேரம் வேகவிட்ட பின்பு மரக்கறி வகைகளுடன் சேர்த்து நன்கு கிளறி பொரித்த நூடிஸைக் கொட்டி அவித்த நூடிசையுமிட்டு கலந்து இறக்கி பரிமாறலாம்.    

Post a Comment

0 Comments