Emulsion Drinks Recipe- எமூல்சன் றிங்ஸ்


 எமூல்சன் றிங்ஸ் செறிவூட்டப்பட்ட ஓர் இனிப்பான பானமாகும். புத்துணர்ச்சியூட்டக்கூடிய இப்பானத்திற்கான ரெசிபி தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்!

3 போத்தல் றிங்ஸ் 

தேவையான பொருட்கள் 

  • எமூல்சன் - 1 அவுன்ஸ் போத்தல்
    (வினோ/ஒரேஞ்/பைனப்பிள்)
  • சீனி - 2500 கிராம் 
  • தண்ணீர் - 6 தம்ளர் 
  • சித்திரிக்கமிலம் - 25 கிராம் 

செய்முறை 

  1. பாத்திரத்தில் சீனியப் போட்டு 6 தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பாகு பொங்கிக் கொதிக்கத் தொடங்கியதும் உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

  2. பாகு நகச்சூடான பதத்தையடைந்ததும் அதனுள் சித்திரிக்கமிலம், ஏமூல்சன் என்பவற்றை இட்டு நன்கு கலக்கி, கலவை நன்றாக ஆறியதும் தொற்று நீக்கிய போத்தல்களில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.

குறிப்பு 

  • பரிமாறும்போது அளவாகத் தண்ணீர் கலந்து, குளிர்பானம் பரிமாறும் குவளைகளில் ஊற்றி அரைத்தேக்கரண்டி ஊறிய கசகசாவை இட்டு ஒரு துண்டு ஐஸ்கட்டியும், ஒரு தேக்கரண்டி அன்னாசிப்பழத் துண்டுகளும் போட்டுக்கொண்ட பின்பு பரிமாறலாம்.

  • உடனடித் தேவைகட்க்கு கரைப்பதாயின் ஏமூல்சனும், சீனியும், சித்திரிக்கமிலமும் கலந்து பெரிய பாத்திரத்திலிட்டு, 20 போத்தல் தண்ணீர்விட்டுக் கரைத்து மேற்கூறிய முறையில் பரிமாறலாம்.        

Post a Comment

0 Comments