Chicken Noodle Recipe - கோழி இறைச்சி டெவில் நூடில்ஸ்

டெவில் நூடுல்ஸ் ரெசிபி! சுவையான  டெவில் நூடுல்ஸ் தயாரிப்பதற்கான படிப்படியான செய்முறை தமிழில் இதோ!

 6 பேருக்கு போதுமான சுவையான டெவில் நூடில்ஸ் 

தேவையான பொருட்கள் 

  • நூடில்ஸ் - 1 பைக்கற் 
  • உருளைக்கிழங்கு - 500 கிராம் 
  • கோழி இறைச்சி - 500 கிராம் 
  • பால் - 1 டம்ளர் 
  • முட்டை - 2 
  • சிலி கார்லிக் சோஸ் - 2 மே.க 
  • சோயா சோஸ் - 2 மே.க 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • மிளகுதூள் - அளவிற்கு 

செய்முறை 

  1. உருளைக்கிழங்கை நன்றாக அவித்து 1 டம்ளர் பால், மிளகு தூள், உப்புத்தூள் என்பன சேர்த்துக்  கிரைண்டரில் அரைத்துக் கொள்க. 

  2. முட்டைக்கு மிளகுத்தூள், உப்புத்தூள் அளவிற்கு இட்டு அடித்து வைத்துக்கொள்க.

  3. கோழி இறைச்சிக்கு  உப்பிட்டு அவித்துச் சிறு துண்டுகளாக வெட்டி சிலி கார்லிக் சோஸ், சோயா சோஸ் என்பன இட்டுப் புரட்டி வைத்துக்கொள்க.

  4. நூடுல்சை பாத்திரத்தில் இட்டுக் கொதிநீர் ஊற்றி மூடி 2 நிமிடங்கள் வைத்து வடித்துக் குளிர் நீரில் கழுவித் தண்ணீரை வடியவிட்டெடுத்துக் கொள்க.

  5. பின்பு தட்டிற்கு மாஜரின் பூசி, நூடுல்ஸ் பரவி அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை ஊற்றி இறைச்சித் துண்டுகளை பரவிக்கொள்ளக. மீண்டும் இதன் மேல் இவ்வாறொரு படையை ஒழுங்குசெய்து கொண்ட பின் மேலே முட்டைய ஊற்றி பேக் செய்க.    

Post a Comment

0 Comments