Arottumak Kool Recipe - அறோட்டுமாக் கூழ்

 


3 பேருக்கு தேவையான  அறோட்டுமாக் கூழ் 

தேவையான பொருட்கள் 

  • அறோட்டுமா - 4 மே . க (நிரப்பி )
  • தண்ணீர் - 4 தம்ளர் 
  • சீனி - 5 மே . க (நிரப்பி)
  • உப்பு - 1 சிட்டிகை 

செய்முறை 

  1. ஒரு தம்ளர் தண்ணீரில் 4 மே. க அறோட்டுமாவைக் கரைத்து வைத்துக் கொள்க.

  2. மிகுதி 3 தம்ளர் தண்ணீரைப் பாத்திரத்திலூற்றிக் கொதிக்க வைத்து, நன்கு கொதித்த பின்பு இறக்கி இரண்டு நிமிடம் வைத்து அதனுள் கரைத்து வைத்துள்ள அறோட்டுமாக் கரைசலையூற்றிக் கட்டிபடாமல் நன்கு கலக்கிப் பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. கலவை ஓரளவு தடிக்கத் தொடங்கும் போது சீனியையும் சேர்த்து நன்கு துழாவிக் காய்ச்சி இறக்கி  ஓரளவாக ஆறிய பின்பு பரிமாறலாம்.

குறிப்பு

    **  சுகதேகிகளுக்காயின், தண்ணீரிற்குப் பதிலாகப் பாலை விட்டுக்                              காய்ச்சிக் கொள்ளலாம்.  



  4 மே . க 


Post a Comment

0 Comments